Wednesday, June 6, 2018

முற்பகல் மீதாணையாக !

முற்பகல் மீதாணையாக !
(மூலம்: அல் குர்ஆன் / சூரா: 93 வத்துஹா)
- Sabeer Ahmed -சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

விடியும் நாள் வளர்ந்து
வீழ்வதற்கு நடுவே;
வட்டச் சூரியன் -நடு
வாணடையு முன்னே;
குளிரென்றால் இதமான
கோடைக்கோப் பதமான
முற்பகல் மீதாணையாக

ஊர்வன விழுங்கிய இரைக்கு -குடலுள் 
வாய்த்திடும் காரிருள் போல
நிசப்தத்தோடு நிலைபெறும்
இரவின்மீ தாணையாக

உம்மைப் படைத்தவன்
உயிரை நுழைத்தவன்
உணர்வை விதைத்தவன்
உலகின் ரட்சகன்
உம்மை 
விட்டுவிடவில்லை
வெறுத்துவிட வுமில்லை !


சூதும் வாதும்
வேதனை செய்யும்
சூழ்ச்சியும் வீழ்ச்சியும்
சுழற்றி அடிக்கும்
தற்காலிகத் தங்குமிடமாம்
தரனி வாழ்வைவிட

நேர்மையும் மகிழ்வும்
நிரம்பிச் செழிக்கும்
நிம்மதியும் நிறைவும்
நிலைத்து நிற்கும்
மறுமை வாழ்வே
மகத்தானது உமக்கு

அருளையும் பொருளையும்
அள்ளி அள்ளி வழங்குவோன்
அன்போடு உமக்கும்
மென்மேலும் தருவான்
மன நிறைவு பெறுவீர்

ஆதரிக்க யாருமில்லா
அரவணைக்கப் பேருமில்லா
அநாதையாய் உமைக் கண்டே
அன்போடு காப்பாற்றி
அரவணைத்து ஆதரித்தான்

மேற்கொண்டு செல்ல
வழியற்று நின்றீர்
மீள்கின்ற இலக்கை
மறந்து விட்டிருந்தீர்;
தெளிவான பாதை
திருத்தி அவன் தந்தான்
நேர்வழி தந்து
நிலைப் புகழ் அளித்தான்

பொருளென்றும் பெயரென்றும்
படைத்தவன் அருளென்றும்
தேவையுடைய உம்
தேடலை நிறைவேற்றி
தன்னிறைவைத் தந்தான்

ஆகவே நீர்
அன்பு காட்ட ஆளில்லா
அரவணைக்க உறவில்லா
அநாதையைக் கோபிக்காதீர்
கடிந்து அவரை வதைக்காதீர்

வசிப்பினில் தோற்று
பசிப்பிணி யுற்ற
யாசகரை விரட்டாதீர்

ஆலங்களைப் படைத்தவன்
அபிவிருத்திச் செய்பவன்
ஆண்டவனின் கிருபைகளை
அவன்தன் ஆளுமையின்
அளப்பரிய அருட்கொடையை
அகிலத்தோர் யாவருக்கும்
அறிவித்து வருவீராக!

முற்பகல் மீதாணையாக !
(மூலம்: அல் குர்ஆன் / சூரா: 93 வத்துஹா)
- Sabeer Ahmed
விடியும் நாள் வளர்ந்து
வீழ்வதற்கு நடுவே;
வட்டச் சூரியன் -நடு
வாணடையு முன்னே;
குளிரென்றால் இதமான
கோடைக்கோப் பதமான
முற்பகல் மீதாணையாக

ஊர்வன விழுங்கிய இரைக்கு -குடலுள் 
வாய்த்திடும் காரிருள் போல
நிசப்தத்தோடு நிலைபெறும்
இரவின்மீ தாணையாக

உம்மைப் படைத்தவன்
உயிரை நுழைத்தவன்
உணர்வை விதைத்தவன்
உலகின் ரட்சகன்
உம்மை 
விட்டுவிடவில்லை
வெறுத்துவிட வுமில்லை !

சூதும் வாதும்
வேதனை செய்யும்
சூழ்ச்சியும் வீழ்ச்சியும்
சுழற்றி அடிக்கும்
தற்காலிகத் தங்குமிடமாம்
தரனி வாழ்வைவிட

நேர்மையும் மகிழ்வும்
நிரம்பிச் செழிக்கும்
நிம்மதியும் நிறைவும்
நிலைத்து நிற்கும்
மறுமை வாழ்வே
மகத்தானது உமக்கு

அருளையும் பொருளையும்
அள்ளி அள்ளி வழங்குவோன்
அன்போடு உமக்கும்
மென்மேலும் தருவான்
மன நிறைவு பெறுவீர்

ஆதரிக்க யாருமில்லா
அரவணைக்கப் பேருமில்லா
அநாதையாய் உமைக் கண்டே
அன்போடு காப்பாற்றி
அரவணைத்து ஆதரித்தான்

மேற்கொண்டு செல்ல
வழியற்று நின்றீர்
மீள்கின்ற இலக்கை
மறந்து விட்டிருந்தீர்;
தெளிவான பாதை
திருத்தி அவன் தந்தான்
நேர்வழி தந்து
நிலைப் புகழ் அளித்தான்

பொருளென்றும் பெயரென்றும்
படைத்தவன் அருளென்றும்
தேவையுடைய உம்
தேடலை நிறைவேற்றி
தன்னிறைவைத் தந்தான்

ஆகவே நீர்
அன்பு காட்ட ஆளில்லா
அரவணைக்க உறவில்லா
அநாதையைக் கோபிக்காதீர்
கடிந்து அவரை வதைக்காதீர்

வசிப்பினில் தோற்று
பசிப்பிணி யுற்ற
யாசகரை விரட்டாதீர்

ஆலங்களைப் படைத்தவன்
அபிவிருத்திச் செய்பவன்
ஆண்டவனின் கிருபைகளை
அவன்தன் ஆளுமையின்
அளப்பரிய அருட்கொடையை
அகிலத்தோர் யாவருக்கும்
அறிவித்து வருவீராக!

-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

No comments: