Tuesday, June 12, 2018

சோதனைகள் சாதனைகளாக மாறி வாழ்வை வெற்றி பாதையில் நகர்த்தும்..

இறைவன்
ஏன் தான் இப்படி சோதிக்கிறானோ..!? பிரச்சினை ஒருநாள் இருக்கும் இரண்டு நாள் இருக்கும்.. ஆனால் தினம் தினம் பிரச்சினைகளை தருவதில் இறைவனுக்கு எத்தனை இன்பம்
என்று நீங்கள் வருந்துகிறீர்களா..!?

இந்த கட்டுரையை படியுங்கள்..!

உண்மையிலேயே இப்படி உங்கள் வாழ்க்கை இருந்தால் நீங்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர் தான்..

இறைவன் உங்களை அதிகம் விரும்புகிறான்..

இந்த உலகத்தில் மனிதனை பரீட்சித்து யார் மிகச் சிறந்த செயல் புரிகிறார் என்பதை பார்க்கத் தான் இறைவன் படைத்திருக்கின்றான்..


ஏன் இறைவன் நம்மை இப்படி பரீட்சித்து பார்க்க வேண்டும்..

வாழும் இந்த உலகில் சாதாரணமாக எத்தனை விதமான பரீட்சயங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு குடும்பத்தை எடுத்துக் கொண்டால் பிள்ளைகள் தன் பேச்சை கேட்டு நடக்க வேண்டும் என பெற்றோர்கள் விருப்பப் படுகிறார்கள்..

கணவன், மனைவி தன் பேச்சை கேட்க வேண்டும் என விருப்பப் படுகிறான்..

மனைவி, கணவன் தன் பேச்சை மதிக்க வேண்டும் என விருப்பம் கொள்கிறாள்..

வேலை விஷயங்களை பொறுத்த வரை முதலாளி வேலை பார்க்கும் தொழிலாளி தன் பேச்சை கேட்க வேண்டும் என விரும்புகிறார்..

வீட்டு எஜமானி வேலையாள் தன் பேச்சை கேட்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்..

இப்படி எதிர்பார்ப்புகள் இருப்பது மட்டுமல்லாது இவர்களுடையே பரீட்சிப்புகளும் உண்டு..
இதில் சிறந்தவர்கள் வெற்றியும் பெறுகிறார்கள்..

மனிதர்களுக்கிடையை இத்தனை பரீட்சிப்புகள் இருக்கும் போது அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்து நம்மையும் படைத்த இறைவன் எந்த அளவுக்கு நம்மை பரீட்சித்து பார்க்க வேண்டும்..

இறைவனும் அவன் விருப்பப்படி நாம் நடக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறென்ன இருக்க முடியும்..!?

இப்படி இறைவனால் வரும் சோதனை ஒருபுறம் இருக்கும் போது தான் சைத்தானின் தாக்கத்தினால் வரும் இன்னல்களும் இருக்கிறது..

சைத்தான் இறைவனிடம் கேட்டுக் கொண்ட அவகாசப்படி மனிதர்களை வழி கெடுப்பான்..

சைத்தானிய எண்ணங்கள் வரும் போது உண்மையாகவே இறையச்சமுள்ள அடியார்களுக்கு அது உணர்த்தப் பட்டு அதிலிருந்து தப்பி விடுவார்கள்..

"உண்மையில், எவர்கள்
இறையச்சத்துடன் வாழ்கின்றார்களோ, அவர்களுக்கு ஷைத்தானுடைய தாக்கத்தினால் ஏதேனும் தீய எண்ணம் ஏற்பட்டால் உடனே விழிப்படைந்து விடுவார்கள். அப்போது அவர்களுக்கு(ச் சரியான செயல்முறை எதுவென்பது) தெளிவாய்ப் புலப்பட்டு விடுகின்றது."(7;201)

ஆனால் அப்படி இறைவன்
உணர்த்திய பிறகும் அதிலிருந்து தப்பாமல் மாட்டிக் கொண்டால் அதற்கு இறைவனை குற்றம் சொல்வதில் அர்த்தமில்லை..அதற்கு அவர்கள் கரங்கள் தான் காரணம்..

"மனிதனின் நிலை எவ்வாறு உள்ளதெனில் அவனுக்கு நாம் நம்முடைய அருட்பேற்றைச் சுவைக்கச் செய்தால் அதன் பேரில் அவன் பூரிப்படைகின்றான். மேலும், அவனுடைய கைகள் செய்த தீவினையின் காரணத்தினால், ஏதேனும் துன்பம் அவனைத் தொட்டுவிட்டால், அவன் மிகவும் நன்றி கெட்டவனாகி விடுகின்றான்."(42:48)

மற்றபடி அனுதினமும் மறவாமல் இறைவனை துதிப்பவர்களுக்கு வரும் துன்பங்கள்,சோதனைகள் அவர்கள் அந்த சோதனைகளால் இறைவனை விட்டு விலகிச் செல்கிறார்களா.. அல்லது பொறுமை காத்து
மேலும் அவனை
நெருங்கித்
துதிக்கிக்கிறார்களா..!?

என்பதை அறிவதில் இறைவனுக்கு கொஞ்சம் அலாதியான ஆர்வம் இருப்பதையும் மறுப்பதிற்கில்லை..

நாம் இந்த உலகத்தில் படக்கூடிய கஷ்டங்கள் நம்மை ஓரளவுக்கு பக்குவப்படுத்தி நம் வாழ்க்கையை நல்ல முறையில் நடத்தி மறுமையில் சுவர்க்க வாழ்வை பெற்றுத் தரும்..

இல்லையென்றால் மறுமையில் நாம் செய்த பாவங்களுக்கு பலனான எந்த கஷ்டத்தையும் நம்மால் காட்ட முடியாது..

ஒருவனுக்கு சோதனை மேல் சோதனையாக இருக்கிறது என்றால் இறைவன் இன்னும் அவனை மெருகூட்டுகிறான்..

வாழ்வில் கஷ்டங்கள்,வேதனைகள் வருவது சகஜம்..அது ஒரு அடியானை தன் வசம் வைத்துக் கொள்ள வேண்டும்.. என்ற இறைவனின் பேரவாவின் வெளிப்பாடு தான்..

அதிகமதிகம் இறைவனுக்கு அஞ்சி வாழும் வாழ்க்கையில் சோதனைகள் சாதனைகளாக மாறி வாழ்வை வெற்றி பாதையில் நகர்த்தும்..

#இன்ஷா_அல்லாஹ்

Saif Saif

No comments: