சொற்கள் சக்தி வாய்ந்தவை. அவை ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவை அவைகளை ஆக்கத்திற்கே பயன்படுத்துங்கள்.
சந்திக்கும் மனிதர்களிடம் உள்ள நல்லதைக் கண்டுபிடித்துப் பாராட்டுங்கள்.
அப்படி நல்லதைப் பாராட்டும் போது அவர்கள் மேலும் நல்லதைச் செய்ய நீங்கள் ஊக்கப்படுத்துகிறீர்கள்.
மற்றவர்கள் வருத்தத்தில் மூழ்கியிருக்கையில் ஆத்மார்த்தமாய் ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லுங்கள்.
வருத்தங்களும், தோல்விகளும் எல்லோரின் வாழ்க்கையிலும் வரும் என்பதையும் அதைத் தாண்டாமல் யாரும் பெரிய வெற்றிகளை அடைந்ததில்லை என்பதை நினைவூட்டுங்கள்.
உங்களுக்குத் தெரிந்து அதே போன்ற நிலைகளில் இருந்து விடுபட்டு மேலுக்கு வந்தவர்கள் பற்றி எடுத்துச் சொல்லி தைரியப்படுத்துங்கள்.
அதன் மூலம் அதிலிருந்து மீண்டு வர அவர்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள்.
காணும் ஒவ்வொரு திறமையையும் சுட்டிக் காட்டி வாழ்த்தத் தயங்காதீர்கள்.
தங்கள் திறமைகள் மீது உண்மையிலேயே நம்பிக்கை ஏற்படும்வரை எல்லாத் திறமையாளர்களுக்கும் ஆரம்பத்தில் இது போன்ற நல்ல வார்த்தைகள் தேவைப்படுகின்றன.
அந்த நல்ல வார்த்தைகளைச் சொல்ல என்றுமே தயங்காதீர்கள்.
இன்றைய நாட்களில் நல்லதாய் நான்கு வார்த்தைகள் கேட்பது உண்மையிலேயே அரிதாக இருக்கிறது.
எத்தனையோ சௌகரியங்களும், வசதிகளும் பெருகி இருந்தாலும் மனப்பற்றக் குறையாலும், நேரப்பற்றாக் குறையாலும் நல்ல நம்பிக்கை, ஆறுதலூட்டும் வார்த்தைகள் கேட்பது அபூர்வமாகவே இருக்கிறது.
அன்பாய் நான்கு வார்த்தைகள் சொல்லவாவது செய்யலாமில்லையா?
அதற்கு என்ன செலவு இருக்கிறது?
அதில் என்ன சிரமம் இருக்கிறது?
ஆம்..
நண்பர்களே...
இந்தக் கணத்திலிருந்து சிரமமில்லாத..
செலவில்லாத அந்த நல்ல செயலை
நாம் செய்ய ஆரம்பிப்_பிடித்தேன்_
_பகிர்கிறேன்_
போமா.
No comments:
Post a Comment