நீங்கள் உங்கள் மூச்சு காற்றின் ஓட்டத்தை கவனித்தது உண்டா ?
உங்களது மனநிலை மாறும்போது உங்கள் சுவாசிப்பும் மாறும். இதை நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள். உங்கள் மனநிலையில் நுனுக்கமான மாற்றம் ஏற்ப்பட்டால் கூட மூச்சு காற்றின் செயல் உடனே மாறிவிடும். இன்னும் பொருத்தமாக சொல்லவேண்டுமென்றால், உங்கள் மனநிலை முழுதும் மாறுவதற்குள்ளாகவே அதற்கேற்றாற் போல சுவாசம் ஏற்கனவே மாறிவிட்டிருக்கும்.
சந்தோஷமாக இருக்கும் போதும், கலவையாக இருக்கும் போதும், கோபமாக இருக்கும் போதும், உள இருக்கத்துடன் இருக்கும் போதும், ஒவ்வொரு விதமாக சுவாசம் ஓடும். நீங்கள் அமைதியாக இருக்கும் போது, திக்ரு (தியானம்) த்தில் இருக்கும் போது உங்கள் மூச்சு காற்றின் செயல் மிக அமைதியாக இருக்கும்.
நீங்கள் இதையெல்லாம் கவனிக்க வில்லை என்றால், பதட்டத்துடன் இருக்கும் போதும், திக்ரு (தியானம்) த்தில் இருக்கும்போதும் கவனித்து பாருங்கள் நமக்கு மூச்சு ஒன்று இருக்கிறது, அதன் செயல்படும் விதம் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது என்று புரியும்.
"இதுவே தனிமையில் திக்ரு (தியானம்) த்தின் ரகசியம்"
اَلَّذِيْنَ اٰمَنُوْا وَتَطْمَٮِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَٮِٕنُّ الْقُلُوْبُ
மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள்தாம்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாகத் நிம்மதி அடையும் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்துகொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் : 13:28)
மௌலவி கலீfபா
அஹமது மீரான் சாஹிப்
உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
(தல்ஸமாத்)
மேலப்பாளையம்
திருநெல்வேலி
No comments:
Post a Comment