என் தோள்மீது
பாரமாய் சாய்கிறது
பக்கத்து
இருக்கைக் காரரின் தலை.
தோளைக் குலுக்கி
அவர்
தூக்கத்தை உலுக்கிப் போடும்
என்
எரிச்சலைக் கொஞ்சம்
ஒத்தி வைக்கிறேன்.
அதீத உழைப்பின்
பிரதி பலிப்பாகவோ,
எப்போதேனும் கிடைக்கும்
தனிமை ஓய்வாகவோ,
தூக்கத்தைத் தொலைத்த
இரவுகளின் தொடர்ச்சியாகவோ,
இருக்கலாம் இந்த தூக்கம்.
என் தோள் மீது
தூங்கி விழவேண்டுமென்று
அவர்
சதித் திட்டம் வகுத்திருக்க
சாத்தியமில்லை.
விழட்டும்.
தோளில் விழுதல்
ஒன்றும்
நாகரீகக் குறைவில்லை
காலில் விழுவதைப் போல
ஃ
சேவியர்
No comments:
Post a Comment