இட ஒதுக்கீடு கிடைக்க போராட்டங்கள் ,கோரிக்கைகள் பல நடைபெற்றுள்ளன .
நேற்றும் கவர்னர் உரையில் அது இடம் பெறாததற்கு கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர் மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜனாப் ஜவாஹிருல்லா ,டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் பலர் வருத்தம் தெரிவித்தார்கள் .
இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொன்னவர் யார்! ? !
(மரியாதைக்குரிய இமாம் ஹாசிமி அவர்கள் ஜும்மா பிரசங்கத்தில் நமக்கு (முஸ்லிம்களுக்கு )இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்ல வேண்டிய அவசியம் எதற்காக! அதிலும் பல கருத்துகள் கொண்ட மக்களுக்கிடையில் .இது தொழுகை சார்ந்த செய்தியா அல்லது மார்க்க விளக்கமா ! )
தகுதி அடிப்படையில் மட்டும் இந்த அளவுக்கு மருத்துவர்களும் ,பொறியாளர்கள் வந்திருக்க முடியுமா?
பல லட்சங்கள் கொடுத்து இடம் பிடித்து மருத்துவ,கணினி ,பொறியாளர் படிப்புக்கு சேருவது அவசிய நிலை இருந்து வருவது நமக்கு தெரியாதா !
ஏழை மாணவருக்கு குறைந்த, தேவையான மதிப்பெண்கள் பெற்றிருந்தால், மருத்துவ,கணினி ,பொறியாளர் படிப்புக்கு சேர இடம் தருவதாக சொல்லி வந்த பணக்கார பாடசாலைகள் ,கல்லூரிகள் சொன்னபடி செய்ததா ?
அதிலும் நன்கொடை கேட்டு வசூல் செய்து ஆரம்பித்தவர்களும் இடம் கொடுக்க ஏழை ,பணக்காரர் என்று பார்க்காமல் கூசாமல் இடம் கொடுக்க பணம் கேட்பதில்லையா !
சிந்தியுங்கள். நன்மை நடக்க பல பாடசாலைகள் ,கல்லூரிகள் தொடங்க செயல் படுங்கள். ஒருவரை சன் T.V நீக்கியதாக வருத்தம் தெரிவித்து பல கருத்துகள் .நமக்கு ஊடகம் தேவை என்றோம்! அது நடக்க வேண்டும். அதுபோல் படிக்க மருத்துவ ,பொறியியல் கல்லூரிகள் தேவை
No comments:
Post a Comment