தந்தை இருக்க
தந்தையை மிஞ்சிய தனயன்
பங்காளி சண்டை
சங்கை அறுத்து
சங்கொலி தருவது போல்
குடும்பத்திற்குள் கட்சி
நடுத்தெருவில் காட்சி
கட்டிக் காத்த உறவு
களங்க மானது பிரிவால்
மற்றவர் சீண்ட
கண்டவர் பார்க்க
களங்கமான வார்த்தை
விளையாடியது நாக்கில்
உதட்டின் பிரிவு
உறவின் பிரிவு
உதடும் கூடும்
உறவும் கூடும்
No comments:
Post a Comment