மனவெளி முழுதும்
இருண்டப் பொழுதில்
உன்னில் நான் கொண்ட
நம்பிக்கை மட்டுமே
மின்மினி பூச்சியாய்
வெளிச்சம் தந்தது.
இங்கே இழப்பது இயற்கைதான்
எதுவும் நிரந்தரமில்லை
அறிந்தே இருக்கிறேன்.
இழந்தப் பொழுதில்
இருக்கியணைத்து
நம்பிக்கை ஒளியை
நெஞ்சில் ஏற்றியது
உன் நினைவுதான்
இழந்தால் குறையும்
யாரும் அறிவர்
இழப்பில் கூட்டுவது
உனக்கு மட்டுமே சாத்தியம்
எடுத்துப்பின் கொடுத்து
நிகழ்ந்த நாடகத்தில்
முருக்கேறியிருக்கிறது
நம்பிக்கையின் நார்கள்
விடிந்தப் பொழுதில்
வெளிச்சம் கண்டு
சூரியனைப் பார்த்து
சிரிக்கும் மலர்களாய்
நன்றியோடு
உனைத் துதிக்கிறேன்.
Mohamed Salahudeen
1 comment:
ஆகா... ரசித்தேன் ஐயா...
Mohamed Salahudeen அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
Post a Comment