Thursday, January 2, 2014

3D ஒரு அதிசயம் : இனி படங்களை தொட்டுபார்க்கலாம்!

3டி தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து
வருகிறது. ஹாலிவுட்டில் பல சினிமாக்கள் 3டி-யில்
வருகின்றன. வீட்டு நிகழ்ச்சிகளை 3டி-யில் படம் பிடிக்கும்
கேமராக்கள் வந்துவிட்டன.

3டி ஒளிபரப்பு அனுமதிக்கு டிஸ்கவரி உள்ளிட்ட சேனல்கள் விண்ணப்பித்துள்ளன. 3டி காட்சிகளை பார்த்து ரசிக்கும் டிவியை எல்ஜி, சோனி, பானாசோனிக் நிறுவனங்கள் அறிமுகப்படுத்துகின்றன.
இந்நிலையில், திரையில் தெரியும் 3டி காட்சிகளை தொட்டு
தடவிப் பார்க்கும் வசதியை ஜப்பான் தேசிய அறிவியல்
தொழில்நுட்ப நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

திரையில் ஒரு பலூன் வருகிறது என வைத்துக்கொள்வோம். அதை
எடுப்பதுபோல கையை கொண்டு சென்றால், நம் கையில்
பலூன் தவழ்வதுபோல காட்சி மாறும். பலூனின் பிம்பம் நமது
கையிலேயே விழும். பலூனை தத்ரூபமாக நம் கையிலேயே
பார்க்கலாம்.

குத்துவது போல விரலை கொண்டு சென்றால், பலூன் பிம்பம்
மாறுதல் அடைந்து குழி உருவானது போல காட்சியளிக்கும்.
பிரத்யேக கேமராக்களின் உதவியுடன் நமது கைகளின்
இயக்கம் தொடர்ந்து படம் பிடிக்கப்பட்டது அதற்கேற்ப காட்சிகள் மாறுகின்றன.

இதன்  அறிமுக நிகழ்ச்சியின்போது இதை அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் செய்துகாட்ட, பார்த்தவர்கள் மிரண்டே போய்விட்டனர்.
முக்கியமான ஆபரேஷன்கள், வீடியோகேம் ஆகியவற்றில்
இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளனர்.


நன்றி : http://abulbazar.blogspot.in/

No comments: