தூக்கம் வரவில்லை என்பதால் துயரம்
துயரம் வந்ததால் தூக்கம் வரவில்லை
துயரத்தைப் போக்க வயிறு நிறைய உணவு
நிறைய உண்டதால் அயர்வு
அயர்வு வந்ததால் சோர்வு
சோர்வைப் போக்க தேனீர்
சோர்வு போனதால் கணினியில் நோட்டம்
கணினியில் முகநூலில் பார்வை
முகநூலைப் பார்க்க இரவு பகலானது
பகலில் பரபரப்புடன் அலுவலகம் நோக்கி ஓட்டம்
அலுவலகத்தில் அயர்வு அடைய
இரவில் தூங்காமல் இருந்ததால்
அலுவலகத்தில் பூனைத் தூக்கம்
தூக்கத்துடன் வேலை பார்த்ததால் தவறுகள்
தவறுகள் மேலாளரிடம் திட்டலை வாங்கித் தந்தது
மேலாளரிடம் திட்டல் பெற்றதால் தூக்கம் தொலைந்தது
Showing posts with label தூக்கம். Show all posts
Showing posts with label தூக்கம். Show all posts
Saturday, August 16, 2014
Monday, January 20, 2014
தூங்கி விழுபவர்
என் தோள்மீது
பாரமாய் சாய்கிறது
பக்கத்து
இருக்கைக் காரரின் தலை.
தோளைக் குலுக்கி
அவர்
தூக்கத்தை உலுக்கிப் போடும்
என்
எரிச்சலைக் கொஞ்சம்
ஒத்தி வைக்கிறேன்.
பாரமாய் சாய்கிறது
பக்கத்து
இருக்கைக் காரரின் தலை.
தோளைக் குலுக்கி
அவர்
தூக்கத்தை உலுக்கிப் போடும்
என்
எரிச்சலைக் கொஞ்சம்
ஒத்தி வைக்கிறேன்.
Saturday, November 9, 2013
ஆழ்மனதில் மனதில் அடங்கியிருந்து கனாவாய் காட்சி கொடுத்தாயோ!
மூளையில் ஏற்படும் இரசாயன நிலை மாற்றத்தினால் தூக்கத்தின் நிலை மாறுபடுகின்றது.
ஆழ்ந்த தூக்கம், தடைப்பட்ட தூக்கம் என்ற பல நிலைகள் தூக்கத்திலும் உண்டு.
அதிகமான கனவுகள் மகிழ்வைத் தரக்ககூடியதாக இருந்தாலும் சில கனவுகள் நம்மை அதிசிய வைக்கும் நிலையில் இருக்கும். தினமும் கனவுகளின் காட்சி தொடர்ந்து வருவதும் ,அச்சமூட்டக் கூடியதாக குழந்தைகள் காணும் கனவுகள் காண்பதும் மனோ நிலையில் பாதிப்பை உண்டாக்கும் .
குழந்தைகளுக்கு தேவையற்ற பயம் தரக் கூடிய நிகழ்வுகளை காண வைப்பதும் பயமூட்டி வளர்ப்பதனாலும் இம்மாதிரியான பயம் காட்டக் கூடிய கனவுகள் குழந்தைகளைப் பாதிக்கின்றது. இருதயம் பட படக்க கண் விழித்து அலறுகின்றது.
Monday, April 25, 2011
தினம் இரவினில் நாம் தூங்கிடும் நேரம்...
தூக்கம்
யார் தூக்கத்தினாலோ அல்லது மறதியினாலோ (தொழுகையின் நேரம் முடியும் வரை அத்தொழுகையை தொழவில்லையோ) அவர் ஞாபகம் வந்ததும் (அல்லது விழித்ததும்) அதை தொழுது கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உறங்கச் செல்லும் போது ஓதும் துஆ.
1734. ‘நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர் ‘யா அல்லாஹ்! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டு விட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்’ என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ தூய்மையானவனாய் ஆகிவிடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்” என்று என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது ‘நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன் என்பதற்குப் பதிலாக உன்னுடைய ரஸுலையும் நம்பினேன் என்று சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘இல்லை, நீ அனுப்பிய உன்னுடைய நபியை நம்பினேன் என்று சொல்லும்’ என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்”.http://www.islamkalvi.com/
The Prophet also said: ‘When you are about to sleep recite aayat-ul-kursiyy till the end of the verse for there will remain over you a protection from Allaah and no devil will draw near to you until morning.’
பாடல் பாடியவர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் ,
Tuesday, November 9, 2010
ஆய்வின்படி பஜர் தொழுகை உடலுக்கு ஆரோக்யமானது
இன்னும், இரவிலும் பகலிலும், உங்களுடைய (ஓய்வும்) உறக்கமும்; அவன் அருளிலிருந்து நீங்கள் தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளினின்றும் உள்ளன - செவியுறும் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.Surat Ar-Rūm
30:23-அல்குரான்
முகம்மது நபி (ஸ அ) இரவின் பகுதி நேரத்தினை கண் விழித்து இறைவனை தொழுவதில் ஈடுபடுவார்கள் (See Fateh-al-Bari page 249, Vol. 1),
அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், தூக்கத்தை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும், அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான். (அல்குர்ஆன் 25:47)
இந்த உடல் இறைவனால் நமக்கு அளிக்கப் பட்ட அற்புதமான அருட்கொடை
தூக்கம் நமக்கு கிடைத்த இறைவனது அருட்கொடையில் மிக முக்கியமானது .
குழந்தையின் தூக்கம் கெடுத்து விட்டால்,தாய் சினம் கொள்வாள்.காரணம் பிறந்த குழந்தைக்கு அதிக நேர தூக்கம் தேவைப்படுகின்றது
தூக்கம் நமது இழந்த சக்தியினை மீட்டு அடுத்த நாள் உழைக்க பலுவினை தருகின்றது .
சிலருக்கு தூக்கம் குறைவாக இருக்கலாம் அதனால் அவர் அதற்காக அதே சிந்தனையில் இருக்கக்கூடாது .அந்த எண்ணம்தான் அவர் உடல்நிலையினை மிகவும் பாதிக்கும்.. தூக்கம் இல்லாமல் எந்த மனிதனும் வாழ முடியாது . நிம்மதியான தூக்கம் இல்லை என்றாலும் அவரை அறியாமல் பூனைத் தூக்கம் அவருக்கு கிடைத்திருக்கும் .
மனிதனுக்கு ஒவ்வொருக்கும் ஒவ்வொரு நேரத்தில் அது கிடைக்கலாம் . கிடைக்கும் நேரத்தினை பயன் படுத்திக் கொள்ளட்டும். பகலில் உணவுக்கு முன் பூனைத் தூக்கம் போடுவது நல்லதுதான்.
கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை
சிலர் நல்ல தூங்கு மூஞ்சியாக இருந்து காலத்தினையும் உடலையும் கெடுத்துக்கொள்வர். அவர்களுக்கு தூக்கம்தான் வாழ்க்கை .
8 மணி நேர தூக்கம் போதுமானது .
பால்காரர்களும் பேப்பர்காரர்களும் ஓசோன் காற்றை சுவாசிப்பதால்தான் அவர்களால் வேகமாக செயல் பட முடிகின்றது . காலையில் எப்படியாவது வைகறை [பஜர் ] தொழுகைக்கு எழுந்தாக வேண்டும்.தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுது வந்தால் உடலின் உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைத்திருக்கலாம்.
தூய்மையான அதி காலை காற்று உடல் நலத்துக்கு மிகவும் நல்லது விடியல் காலையில் பஜர் தொழுகைக்கு போகும் போது சுத்தமான ஓசோன் காற்றை சுவாசிப்போமே அப்போது வரும் ஒரு உற்சாகம் அது மிகவும் உயர்வானது
மிதமிஞ்சிய பேச்சு, உணவு, தூக்கம் ஆகியவற்றின் காரணமாக அவலநிலையும், அழிவு நிலையும் ஏற்படுவதால் நபி வழியில் ஷரீஅத் சட்ட ஒளியில் நாம் முதலில் நடந்து, பிற சமுதாயத்தினரும் இப்பேருண்மையை ஏற்று குற்றமற்ற நிம்மதி நிறைந்த உலகைப் படைக்க முயற்சிப்போமாக, வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.

Monday, April 19, 2010
பதின் வயதினருக்கானது ….
முழுக்க முழுக்க பதின் வயதினரை மட்டும் வைத்து நிகழ்த்தப்பட்ட ஆய்வு முடிவு ஒன்று இன்றைய பதின் வயதினரை ஒழுங்காகத் தூங்குங்கள் என எச்சரிக்கிறது
தூங்காதே தம்பி தூங்காதே என பாடியதெல்லாம் பழைய கதை. இப்போது இளைஞர்களையும், பதின் வயதினரையும் பார்த்து தூங்குங்கள், தூங்குங்கள் என துரத்தும் காலம். அவர்களைத் தூங்காமல் இருக்க வைப்பதற்காக ஊடகங்கள் பயனற்ற அரைகுறைக் கலாச்சார நிகழ்ச்சிகளை நிதமும் அரங்கேற்றிக் கொண்டே இருக்கின்றன.
நள்ளிரவுக்கு மேலும் விழித்திருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும், கணினியில் விளையாடுவதும், செல்போனில் அளவளாவுவதும் என இன்றைய இளசுகளுக்கு தூக்கத்தைத் தவிர்க்கும் வழிகள் ஏராளமாய் இருக்கின்றன.
இவையெல்லாம் உடல்நலத்துக்கு பெரிதும் தீங்கானது, போய் தூங்குங்கள் என பெரியவர்கள் சொன்னாலும் இந்த பதின் வயதினர் அவற்றைக் காதுகொடுத்துக் கேட்பதில்லை. அப்படிப் பட்டவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாய் வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.
Subscribe to:
Posts (Atom)