Thursday, January 30, 2014

கைராசியும் கால்ராசியும் பின்னே ஞானும்...!!


குறிப்பிட்ட ஒரு பள்ளியில் கடந்த வருடம் நண்பர்களின் குழந்தைகளைச் சேர்ப்பதற்காக மூன்று விண்ணப்பங்களை வாங்கி அனுப்பினேன். கொஞ்சம் கண்டிப்பான,பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படாத பள்ளி அது.
கடந்த வருடம் அந்த மூன்று குழந்தைகளும் நுழைவுத்தேர்வு எழுதினார்கள்,வெற்றி பெற்றார்கள்,பள்ளியில் இணைந்தார்கள்.

இந்த வருடம் அந்த நண்பர்களில் ஒருவர்
தொடர்புகொண்டு கேட்டார்,
"ஒரு அஞ்சு அப்ளிகேஷன் வாங்கணும் சார்"

"எதுக்குங்க அவ்ளோ அப்ளிகேஷன்"

"இல்ல, நீங்க வாங்கித்தந்த அப்ளிகேஷன்ல எல்லாக் குழந்தைகளுக்கும் சீட் கெடச்சுடுச்சு. அதனால உங்க ராசியான கையால என் மச்சினன் குழந்தைகளுக்கும் தம்பி குழந்தைகளுக்கும் அப்ளிகேஷன் கொடுத்தீங்கன்னா எல்லாத்துக்கும் சீட் கெடச்சிடும்..."

" அப்போ, நான் அப்ளிகேஷன் வாங்கிக் கொடுத்து சீட் கிடைக்கலேன்னா என்னை ராசி இல்லாதவன்னு சொல்லுவீங்களா..."

"சேச்சே, அப்படியெல்லாம் இல்ல...வந்து ஒரு சென்டிமென்ட்தான்......." என்று இழுத்தவரிடம் சொன்னேன்.

" தகுதியுள்ள குழந்தைங்கங்கறதுனாலதான் சீட் கெடச்சுது. கைராசி கால்ராசிக்கெல்லாம் தயவுசெஞ்சு மயங்கிடாதீங்க.
இப்ப அந்த ஸ்கூல் அப்ளீகேஷன நெட்லயே டவுன்லோட் பண்ணிக்கலாம். பெத்த தகப்பனவிட அக்கறை வேற யாருக்கும் இருக்காது. அதனால உங்க மச்சினரையும் தம்பியையுமே வந்து அப்ளீகேஷன் கொடுக்கச் சொல்லுங்க.."

# என்னுங் நாஞ்சொல்றது....!!

-நிஷா மன்சூர் Nisha Mansur










அதிர்ஷ்டத்தை நம்புகிறவனோடு சேர்ந்தால் உழைப்பை கொச்சைப்படுத்தி விடுவான்.

#தத்துவம்.
 
 ரஹீம் கஸாலி

No comments: