அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
நாகூர் ரூமி பிறந்து வளர்ந்த ஊர் நாகூர்
நாகூரைச் சேர்ந்த படைப்பாளிகளில் கவிஞர் நாகூர் சலீம், வசனகர்த்தா தூயவன் ஆகியோர் நாகூர் ரூமியின் தாய் மாமாக்கள். சித்தி ஜுனைதா பேகம் ரூமியின் பெரியம்மா!
இப்போது ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவராகப் பணியாற்றும் நாகூர் ரூமி, கம்பன் கவிதைகள் மற்றும் மில்டன் கவிதைகள் குறித்து பிஹெச்டி ஆய்வினை மேற்கொண்டவர்!
ஆங்கிலத்தில் ஐந்து, தமிழில் 27, மொழிபெயர்ப்பு ஆறு என இதுவரை 38 நூல்களை எழுதி இருக்கிறார் நாகூர் ரூமி!
இவர் எழுதிய இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூலுக்கு திருப்பூர் தமிழ்ச்சங்கம் விருது கொடுத்து கௌரவித்து உள்ளது. இவருடைய ஹோமரின் இலியட் காவியத் தமிழ் மொழிபெயர்ப்புக்காக திசையெட்டும் தமிழாக்க விருது பெற்றுள்ளார்
அன்புடன் முகம்மது அலி
சில நாட்களுக்கு முன்பு எங்கள் கல்லூரிக்கு வணிகவியல் துறை சார்பாக நடந்த ஒரு விழாவுக்கு பன்முக ஊடகவியலாளரும் உலக கிரிக்கட் நேர்முக வர்ணனையாளருமான திரு சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவருக்கு என் இந்த விநாடி என்ற நூலை அப்போது நான் கொடுத்தேன். படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள் என்று கேட்டிருந்தேன். ஆனால் அவர் நான் வியக்கும் விதமான ஒரு காரியம் செய்திருந்தார்.
Australian Tamil Broadcasting Corpn வானொலியில் நேற்று (ஞாயிறு 09.02.2014) முற்பகல் 11 மணிக்கு அந்த நூலின் "U டர்ன் அடியுங்கள்" என்ற மூன்றாவது அத்தியாயத்தை அவரே தன் கம்பீரக்குரலில் பேசி ஒலிபரப்பு செய்துவிட்டார்!
என் நூல் அவரை என்னவோ செய்துள்ளது. செய்யும். ஏனெனில் அது என் நூலே அல்ல. என் குருநாதர் ஹஸ்ரத் மாமா சொன்ன கருத்துக்களைத்தான் நான் என் பாணியில் அதில் சொல்லியிருந்தேன். எனினும் இந்த கௌரவத்துக்காக அவருக்கு எப்படி நன்றிசொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஆஸ்திரேலியாவரை என் புகழை அவர் பரப்பிவிட்டார்! அவர் நீடூழி வாழட்டும். அல்ஹம்துலில்லாஹ்.
நன்றியுடன்
நாகூர் ரூமி
No comments:
Post a Comment