Tuesday, January 8, 2019

முதன் முதலாக

என் வீட்டில் முதன் முதலாக
எனது சம்பாத்தியத்தில்
தொலைபேசி வைக்க
ஏற்பாடு செய்தேன்

நீ என்ன பெரிய பிசினஸ் மேனா தொலை பேசி கேட்குது என்று சொன்னார்கள்

நான் முதன் முதலாக
எனது சம்பாத்தியத்தில்
கைத்தொலைபேசி வாங்கினேன்
பொழைக்க வந்த இடத்தில்
இதெல்லாம் தேவையா என்றார்கள்.


நான் முதன் முதலாக எனது சம்பாத்தியத்தில்
மோட்டர் சைக்கிள்
வாங்கினேன்

வெளிநாடு போய் வந்ததால
வெட்டி பந்தா காட்டுறான்னு
சொன்னார்கள்.

நான் முதன் முதலாக என் சம்பாத்தியத்தில்
வீடு ஒன்று கட்டினேன்

சம்பாதிச்ச காசு மாதிரி தெரியலையே
அடிச்சுட்டு வந்துட்டானோ
திரும்பி போகலேன்னா
கன்பார்ம்னு காத்திருந்தார்கள்.

இப்படி நானே சம்பாதித்து அனுபவித்தவைகளுக்கு
வியாக்கியானம் பேசியவர்கள்

சம்பாதிக்க கூட ஆரம்பிக்காத தன் பிள்ளைகளுக்கு இவர்கள் உழைப்பில் அனுபவிக்க வைத்து அழகு பார்க்கிறார்கள்..!!

"உலகம் ஒரு போதும்
நீ எடுத்து வைக்கும் முதல் அடியை அங்கீகரிப்பதில்லை"

தமிழ் பிரியன் நசீர்

No comments: