Wednesday, January 9, 2019

இறையியல் 'உலமா' பட்டம்

இறையியல் 'உலமா' பட்டம் பெற்றதால் மட்டும் மதிக்கப் படுவது கிடையாது

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இறையியல் 'உலமா' பட்டம் (இஸ்லாம் பற்றிய அறிவு) பெற்ற அறிஞர்கள்.

இஸ்லாமிய கல்வி போதிக்கும் பாடசாலைகளில் (மதரஸாக்களில்) மார்க்க அறிவு போதிக்கும் போது மார்க்க முறைப்படி வாழவும் பயிற்சிக்கப் படுகின்றது . சில ஆண்டுகள் கற்ற பின்பு போதிய அளவு மார்க்க அறிவு பெற்ற பின்பு தேர்வு நடத்தி அதில் மதிப்பெண்கள் பெற்ற பின்பு அந்த உலமா' பட்டம் (சனது) கொடுக்கின்றார்கள்.


அப்பட்டம் பெற்றதால் அவர்கள் முழுமையாக இஸ்லாமிய கல்வி பெற்றதாக நினைக்காமல் மேற்கொண்டு இஸ்லாமிய அறிவைப் பெறவும் அதனை ஆய்வு செய்யவும் முற்படுகின்றார்கள் .

இறையியல் 'உலமா' பட்டம் பெற்றதால் அவர்கள் மதிக்கப் படுவது மற்றும் மரியாதையாக நடத்துப் படுவதும் அவர்கள் தொடர்ந்து தங்கள் வாழ்வை கற்ற கல்வியோடு இஸ்லாமிய நெறிப்படி வாழ்வதில்தான் சிறப்பாகின்றது.மற்றும் அவர்கள் தங்கள் வாழ்வையே இஸ்லாமிய குர்ஆன்,நபிவழிப்படி வாழ்வதாலேயே அவர்கள் மதிக்கப் பட்டு மக்களால் மதிக்கப் பட்டு உய்ர்வடைகின்றார்கள்.

'உலமா'க்களுக்கு சேவை மனப்பாங்கும் இருப்பதால் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் குறைந்த வருமானம் தரக் கூடியதிலும் நிறைந்த மனதோடு தங்கள் சேவையை தொடர்கின்றார்கள்,
அவர்களது நோக்கமே இறையருளை நாடி உள்ளது .

No comments: