Friday, January 4, 2019

"தன்னியக்க உணர்திறன் மெரிடியன் பதில்"

by Abdul Basith
Autonomous sensory meridian response (ASMR) என்பதற்கு அர்த்தம் "தன்னியக்க உணர்திறன் மெரிடியன் பதில்" என்று கூகுள் ட்ரான்ஸ்லேட் சொல்கிறது. ஒன்னும் புரியலைல, எனக்கும் புரியல. சரி நமக்கு புரியிற மாதிரி (அல்லது நான் புரிஞ்சிக்கிட்ட மாதிரி) பாக்கலாம்.

ஏதாவது ஒரு பொருளை பேக்கிங் பண்றதுக்கு bubbles உள்ள பிளாஸ்டிக் சீட் பயன்படுத்துவதை பார்த்திருப்பீங்க. நம்மல்ல பல பேர் சின்ன வயசுல அந்த பப்பிள்சை உடைச்சி சந்தோசப்பட்டிருப்போம்.


அதே மாதிரி மழையின் சத்தத்தை நம்மல்ல பல பேர் ரசிச்சிட்டு இருப்போம்.

KFC மாதிரி Crispyயான உணவு பண்டங்களை சாப்பிடும்போது ஒரு சத்தம் வருமே? எத்தனை பேருக்கு அது பிடிக்கும்?

முடிவெட்ட சலூன்கு போனா கத்திரியால முடி வெட்டும்போது ஒரு சத்தம் வருமே? எத்தனை பேருக்கு அது பிடிக்கும்?

முடி வெட்டுன பிறகு மசாஜ் செய்யும்போது முதுகை தட்டும் சத்தம் எத்தனை பேருக்கு பிடிக்கும்?

பரோட்டா மாவு பிணைந்த பின்னால கையில எண்ணெய் தடவி அந்த மாவை தட்டி வீசுவாங்களே? அது எத்தனை பேருக்கு பிடிக்கும்?

இது மாதிரி இன்னும் பல உதாரணங்கள் சொல்லிக்கிட்டே போகலாம். இதெல்லாம் நடக்கும்போது உங்க உடம்புல ஒரு உணர்வு வரும்ல? அதை தான் ASMR னு சொல்றாங்க..

மேல சொன்னதுல "எத்தனை பேருக்கு பிடிக்கும்"னு கேள்வி கேட்டிருக்கேன். அதுக்கு காரணம் இந்த உணர்வு எல்லாருக்கும் வருவதில்லை.

சரி இப்ப எதுக்கு இதை பத்தி பேசுறேன்னா, யூட்யூப்ல சமீபமா இது மாதிரி வீடியோ பிரபலமாயிட்டு வருது. ஒரு மழை பெய்யும் வீடியோ 24 Millions Views பெற்றிருக்குன்னு சொன்னா உங்களால நம்ப முடியுதா? ஒருவர் (முகத்தை காட்டாமல், எதுவும் பேசாமல்) பரோட்டா சாப்பிடும் வீடியோ 29,000 views பெற்றிருக்குன்னு சொன்னா நம்ப முடியுதா?

இதுலேயே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும், இந்த டாபிக் எவ்வளவு பிரபலம்னு..

இது மாதிரியான வீடியோக்களுக்கு நீங்க அதிகமா பொருட்செலவு செய்ய வேண்டியது இல்ல. Voice-over கொடுக்கும் அவசியமும் இல்லை.

நீங்க ASMRனு யூட்யூப்ல தேடுனா உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும். இல்லைனா நீங்க எந்த ASMR வீடியோ பற்றி பார்க்க நினைக்கிறீங்களோ அந்த வார்த்தையை சேர்த்து தேடுங்க. உதாரணத்திற்கு, "parotta asmr", "soap asmr", "asmr eating".

இது மாதிரி வீடியோக்களுக்கு thumbnail ரொம்ப முக்கியம். பார்க்க அட்டகாசமா அதே சமயத்துல வீடியோல உள்ள படத்தை Thumbnailஆ வைங்க..

அடுத்து Keywords. உங்க வீடியோ Title, Description, Tags, Video file name எல்லாத்துலயும் கீவோர்ட் பயன்படுத்துங்க..

இதுக்கான சில கீவோர்ட்ஸ்: ASMR, Satisfying Video, most satisfying video, satisfying slime video

Reddit தளத்துல மறக்காம வீடியோவ ஷேர் பண்ணுங்க..

இதை செஞ்சா உங்களுக்கு 100% வெற்றின்னு நான் சொல்ல மாட்டேன். உங்களுக்கு ஒரு ஐடியா மட்டும் தான் சொல்றேன். மத்ததெல்லாம் உங்க கையில தான் இருக்கு...

இவ்ளோ ஐடியா இருக்கே, நீ ஏன் இதையெல்லாம் செய்யிறதில்லை?னு நீங்க கேட்டா... பல ஐடியா இருந்தாலும் அதை செயல்படுத்தும் சூழ்நிலை எனக்கு இன்னும் அமையவில்லை. அமையும் வரை ஐடியாMoney ஆகவே இருந்துவிட்டு போகிறேன். ☺️

Abdul Basith

No comments: