Sunday, January 27, 2019
ஒரு நாள்
வேலை செய்யும் அலுவலகத்தில் ஒருவர் முதலாளியிடம் போய் ஒரு நாள் லீவு கேற்கிறார்.
முதலாளி: வருடத்தில் மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா????
365 நாள் ஐயா
முதலாளி: அதில் மொத்தம் எத்தனை வாரம்?
52 ஐயா
முதலாளி: ஒரு வருஷத்தில் எத்தனை சனி,ஞாயிறு வரும்???
104 ஐயா
முதலாளி: மொத்தத்தில் 261 நாள்தான் Balance இருக்கு.
சரி நீ ஒரு நாளைக்கு மொத்தம் எத்தனை மணி நேரம் வேளை செய்கிறாய்??????
8 மணி நேரம் ஐயா
முதலாளி: அடுத்த 16 மணி நேரம் என்ன செய்ற???
வீட்லதானே இருக்கிற????
ஆமாம் ஐயா
முதலாளி: 16 மணி நேரத்தையும் கூட்டி ஒரு வருஷத்துக்கு பாரு?
175 நாள் நீ வீட்ல இருக்கிற???
இப்போ சொல்லு மிச்சம் எத்தனை நாள் இருக்கு??
91 நாள் இருக்கு ஐயா
சரி ஒரு நாளைக்கு நீங்க tea 🍵 குடிக்க 30 நிமிஷம் சராசரியாக எடுப்பீங்க
இப்போ 30 நிமிஷம் படி ஒரு வருஷத்துக்கு பாரு
23 நாள் ஐயா
அப்போ மிச்சம்???
78 நாள் ஐயா..
அதில சாப்பாட்டுக்கு 1 நாளைக்கு 1 மணி நேரம் . இதன் படி
46 நாள்.
அப்போ மிச்சம் எத்தனை நாள்?
22 நாள் ஐயா
இதில் உடல் நிலை சரியில்லை என்று எப்படியும் 2 நாள் லீவ் எடுத்துக்குவ.
இப்போ எத்தனைநாள்??
20 நாள் ஐயா
இதில் 5 நாள் எப்படியும் Personal work அப்படீனு லீவ் எடுத்துக்குவ???
இப்போ எத்தனை நாள்???
15 நாள் ஐயா
இதில Annual லீவுனு 14 நாள் எடுப்ப????
இப்போ எத்தனை நாள் ???
1 நாள் ஐயா
ஆஹ அந்த ஒரு நாளையும் லீவு கேட்டு வந்திருக்க??????
..... ....... .....
...படித்ததில் பிடித்தது🙋♂
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment