Thursday, January 24, 2019

BORN LEADER

by.
dr.Vavar F Habibullah

BORN LEADER
நான் பிறந்த ஆண்டு 1947
சுதந்திர இந்தியாவில் பிறந்து
வளர்ந்து வாழ்ந்து வரும் ஒரு
இந்திய குடிமகன் என்ற
உரிமையில்...
இது வரையில் நமது தேசத்தை
மாநிலத்தை ஆட்சி செய்து
வந்துள்ள அரசியல் தலைவர்கள்
பற்றி சற்று ஆராயும்போது ஒரு
கேள்வி எழுகிறது.
தலைவர்கள் பிறக்கிறார்களா!
இல்லை உருவாக்கப்படுகிறார்களா!
“ARE LEADERS BORN OR MADE”



தலைவர்கள் என்றுமே
தலைமை பண்புடன்
பிறக்கிறார்கள் என்பதே
உண்மை.
தலைமை பண்பை தகுதி
இல்லாதவர்களிடம் ஒட்ட
வைத்து தலைவன் போல்
ஜோடித்து மக்களை நம்ப
வைத்து ஏமாற்றுவது சில நாள்
கை கொடுக்கலாம்.இந்த
மாறு வேட காட்சி நீண்ட
காலம் கை கொடுக்குமா என்ற
கேள்விக்கு இல்லை இல்லை
இல்லவே இல்லை என்று தான்
காலம் தன் பதிலை தெளிவாக
பதிவு செய்து இருக்கிறது.

மேனேஜ்மெண்ட் டிரெய்னிங்
வர்க்சாப்பில் நான் சாதாரணமாக
சொல்வது லீடர் தகுதிக்கு மிக
முக்கிய தேவை CAP என்ற
மூன்று எழுத்து. அதாவது,
Capacity to Attract People
சாதாரண மக்களையும்
தன் பால் ஈர்க்கும் ஆற்றல்..

மக்கள் தலைவர்கள் இந்த
ஆற்றல் அதிகம் பெற்றவர்கள்.
காந்தியிடம் இந்த காந்தம்
இருந்தது.பண்டித நேருவிடம்
அது இயற்கையாய் அமைந்தது.
பச்சிளம் குழந்தைகள் கூட
அவரை சுற்றி வலம் வந்தனர்.
இந்திராவிடம் இந்த கவர்ச்சி
மிகவும் அதிகம் கொட்டிக்
கிடந்தது. பெற்ற மகன்களே
ஆயினும் இளைய மகன்
சஞ்சயிடம் இல்லாத ஈர்ப்பு
ராஜீவிடம் சற்று அதிகமாகவே
இருந்தது.

இதனால் தான் அரசியல்
என்பது எல்லா தேசங்களிலும்
எல்லா காலங்களிலும் தலைவர்களாலேயே நிர்ணயம்
செய்யப் படுகிறது. தலைவனின்
சொல்லே சட்டம் ஆகிறது.

நமது தமிழகத்தில் கூட
ராஜாஜியிடம் இல்லாத கவர்ச்சி
காமராஜரிடம் அதிகம் இருந்தது.
தமிழக அரசியலில்.. அண்ணா
ஒரு காந்த அலையாக திகழ்ந்தார்
அவர் பேச்சில் எழுத்தில் மயங்காத
தமிழரே இல்லை.நாவலரிடம்
இல்லாத கவர்ச்சி கலைஞரிடம்
நிறைவாக இருந்தது. நடிகர் திலகத்தை விட மக்கள்
திலகத்திடம் கவர்ச்சி அதிகம் மண்டிக் கிடந்தது.எனது நண்பர்
திருநாவுக்கரசர் அப்போது...
அடிக்கடி சொல்வார்
“எம்ஜிஆர் தான் ஹீரோ
நாங்கள் எல்லாம்
வெறும் ஜீரோ!”
உண்மை தான் அது.
ஜெயலலிதா சந்தேகம் இல்லாமல் ஒரு “கரிஷ்மேடிக் லீடர்” தான்.
அவர் இடத்தை நிரப்பும் தகுதி
அந்த கட்சியில் எவருக்கும் இருப்பதாக தெரியவில்லை.

மறைந்த முன்னாள் அமைச்சர்
காளிமுத்து அடிக்கடி சொல்வார்.
“கருவாடு மீன் ஆகாது” என்று.
அன்று அவர் சொன்னதின்
பொருள் இப்போது புரிகிறது.
காமராஜர் தொட்டு ஜெயலலிதா
வரை டெல்லியை அசைத்து
பார்க்கும் வல்லமை மிக்க மாநில
தலைவர்களாக விளங்கினர்.
மக்கள் சக்தி தங்கள் பக்கம்
முழுமையாக இருந்ததே
இதற்கான காரணம்.

அடுத்த பிரதம வேட்பாளர் யார்
என்ற கேள்விக்கான விடையை
நாடு எதிர் பார்த்த நிலையில்...
ராகுலின் தகுதியை நிராகரித்த
வர்கள் கூட இப்போது அடிக்கடி
வானத்தை உற்று நோக்குகிறார்கள்.
ஒரு புதிய இளம் சூரியன் கிழக்கே
உதயமாகி விட்டது.
a national LEADER is just born
மனிதன் தவறு செய்யலாம்
இயற்கை தவறு செய்வது இல்லை.
வெற்றிடங்கள் தகுதியானவர்களால்
மட்டுமே நிரப்பப்படும் என்பதற்கு
பிரியங்கா காந்தியின் அரசியல்
நியமனம் ஒரு சான்றாகும்.
வெற்றி பெற நல் வாழ்த்துக்கள்.


                                                Vavar F Habibullah


No comments: