#அல்அய்ன்_என்றொரு
#அமீரக_அழகு
அமீரகத்தில்
அல் அய்ன் என்றொரு
அற்புதமான இடம் !
மலைப்பிரதேசம்.
அங்கே ...
ஒன்றை மிக அழகான முறையில்
இயற்கை கலநயத்தோடு
பெரும் பொருட் செலவில் அமைத்திருக்கிறார்கள்.
நாள் முழுவதும் அங்கே சுற்றிப்பார்க்க
அத்தனை சுவாரஸ்யம் இருக்கிறது.
மரங்களையெல்லாம்
அத்தனை வனப்போடு செதுக்கி
குடில்களைப்போல
கோபுரங்களைப்போல
வானக் கூரைகளைப்போல
வடிவமைத்திருக்கிறார்கள்.
கண்ணாடித் தடுப்புகளின் அந்தப்புறத்தில்
சிங்கங்கள் வீறுநடைபோட
குழந்தைகள் அச்சமே இல்லாமல்
மறுபுறம் சிங்கங்களை சீண்டிப் பார்க்கின்றன.
உண்மையிலேயே ரொம்ப வித்தியாசமான
ஆனந்த அனுபவம்.
நம்ம ஊர் சிங்கங்களைப்போல
பசியும் பட்டினியுமாய்
எலும்பும் தோலுமாய் இல்லாமல்
நன்றாக இரை உண்டு கொழுத்து
உரத்த குரலில் கர்ஜிக்கின்றன
இந்த ஆப்பிரிக்க வெள்ளை சிங்கங்கள்.
காண்டாமிருகம்
சிறுத்தை
கழுதைப்புலி
மலைப்பாம்பு
கிளிகள்
மான்கள்
ஒட்டகை சிவிங்கிகள்
நம்முடைய ஒன்று விட்ட உறவுகளான
குரங்குகள் என
ஏகப்பட்ட விலங்குகள்
ஆயிரக்கணக்கான ஏக்கர்
நிலத்தில் சர்வ சுதந்திரமாக
சுற்றித் திரிகின்றன.
ஏராளமான இடங்களை
சுற்றி சுற்றி வந்து பார்ப்பதற்குள்
கால்கள் அலுத்து விடும்.
அதனாலென்ன ...
அதற்காகவே ஏராளமான பேட்டரி கார்கள்
இயங்குகின்றன.
சுகமாக சுற்றி வரலாம்.
அல்அய்ன் மலை உச்சியில்
இன்றைய இரவு 9 மணி வெப்ப நிலை 9° செல்சியஸ். பத்து மணிக்குள் 5° யாக மாறிவிடும்.
அங்கே நான் காரைவிட்டு இறங்கியதும்
குளிர் அப்படியே என்னை துளைத்தெடுத்து விட்டது.
விலா எலும்புகள் நொறுங்கி விழுவதைப்போல வலி.
அந்த வலியையும் தாங்கிக் கொண்டு
ஸ்வெட்டர் போடாமல்
பத்து நிமிஷம் குளிரில் வெடவெடுத்து
நடுங்கியது ஒரு மகா அவஸ்தை அனுபவம்.
மலையில் கொஞ்சம் கீழே
கிரீன் பார்க் ஒன்று இருக்கிறது.
பார்க்கை சுற்றி பச்சை பசேல் என்றிருக்கும்.
முன்னர் நான் வந்தபோது இருந்த
அந்த பச்சை இப்போது இல்லையென்றாலும் அழகான இடம்.
அமீரகத்தின் அழகான இடங்களில்
மிக அருமையான இடம்
அல்அய்ன்.
வீட்டுக்கு வந்து போர்த்திக்கொண்டு
படுத்த பிறகும்
அல்அய்ன் குளிர் நடுங்க வைக்கிறது.
Abu Haashima
No comments:
Post a Comment