Yembal Thajammul Mohammad
உலகில் கடந்த 1400-ஆண்டுகளுக்கும் மேலாக எத்தனையோ கோடி மக்கள் சத்திய மார்க்கத்தைத் தேடிக் கண்டறிந்து நிம்மதி அடைந்து வருகின்றனர்.
அப்படி அறிவார்ந்த சிந்தனையின் அடிப்படையில் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றவர்கள் கூறும் பல்வேறு காரணங்கள் அறிவுக்கு இன்பம் தருவதாக இருக்கும்.
மனிதவாழ்வில் அறிந்து மட்டுமல்ல அறியாமலும் செய்யும் பாவங்கள் ஏராளம்.தெரியாமல் முள்ளை மிதித்தாலும் நமக்கு வலிக்காமல் இருக்கப் போவதில்லை. வலிக்கு மருந்து, பாவத்திற்கு மன்னிப்பு கண்டிப்பாக தேவை.
பாவங்களை மன்னிக்கும் மாண்பு, படைத்த இறைவனுக்கே உரியது.அது காசுக்குக் கிடைக்குமென்றால் கொடுப்பவன் ஏமாறுகிறான். வாங்குகிறவன் ஏமாற்றுகிறான் என்பதில் ஐயம் இல்லை.
பிரபல எழுத்தாளர் கமலா, சுரய்யாவாக மாறி இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றபோது அவர் கூறிய காரணம்: "எனக்கு மன்னிக்கும் இறைவன் வேண்டும்.அதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வே!"
வல்ல அல்லாஹ் எந்த அளவுக்கு மன்னிக்க நாடுகிறவனாக இருக்கிறான் என்பதைக் கீழ்க்கண்ட நிறைமொழி பிரகடனப்படுத்துகிறது.
படைத்தவனிடம் பணிவோடு பாவமன்னிப்பைக் கேட்போம்.பரிசுத்தமாவோம்.
(1.தவ்பா-பாவமன்னிப்பு கோரி, பாவங்களின் பக்கம் மீளாது இருக்க உளங்கொள்ளல்)
2.கரும்பலகையில் ஹிஜ்ரி, ஈஸவி இரண்டு காலந்தேர் கணக்குகளும் குறிக்கப்பட்டுள்ளதை கவனியுங்கள்)
Yembal Thajammul Mohammad
No comments:
Post a Comment