இடைவெளி
நிகழ்காலம்
ஓஷோ,,
தியான யுக்திகள்,,,
இடைவெளியை உணர்ந்து பார்,,,,
பிரபஞ்சம், தெய்வீகம், இடைவெளியில் தான் உள்ளது.
இரண்டு வார்த்தைகளுக்கிடையில், இரண்டு எண்ணங்களுக்கிடையில், இரண்டு ஆசைகளுக்கிடையில், இரண்டு உணர்ச்சிகளுக்கிடையில், இரண்டு உணர்வுகளுக்கிடையில் உள்ள இடைவேளைகளில் தான் உள்ளது.
தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையே, அல்லது விழிப்புக்கும் தூக்கத்துக்கும் இடையே உள்ள இடைபட்ட வேளையில் உள்ளது.
உடலுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள இடைவெளியில் உள்ளது.
அன்பு வெறுப்பாக மாறும் போது இங்கே அன்பு போயிருக்கும், இன்னும் வெறுப்பு வந்திருக்காது, அது அன்பாக இருக்காது, ஆனால் அது இன்னும் வெறுப்பாகவில்லை.
அந்த இடைப்பட்ட நேரம் – கடந்தகாலம், எதிர்காலமாக மாறும்போது இடைவெளி அது அன்பாக இல்லை, ஆனால் எதிர்காலம் இன்னும் வரவில்லை, அந்த இடைவெளி, மிகச் சிறிய இடைவெளி.
அதுதான் நிகழ்காலம் அதுதான் இப்போது.
அது மிகச் சிறியது.
எனவே நீ அதை ஒரு காலத்தின் நேரமாக அழைக்க முடியாது.
அது பார்க்க முடியாத அளவு சிறியது.
அதை பிரிக்க முடியாது.
அந்த கணநேரம் காணமுடியாதது.
அது ஒவ்வொரு கணமும் ஆயிரத்தோரு வழிகளில் வருகிறது.
உனது மனநிலை ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறுகிறது, நீ அவற்றின் ஊடே செல்கிறாய்.
இருபத்தி நான்கு மணி நேரத்தில் நீ பலமுறை தெய்வீகத்தை கடந்து வருகிறாய், ஆனாலும் எப்படி நீ தொடர்ந்து தவற விடுகிறாய் என்பது ஆச்சரியமான விஷயம்தான்.
ஆனால் நாம் இடைவெளியை பார்ப்பதேயில்லை, இடைவெளியை பார்க்காமல் இருக்கும் தந்திரத்தை நாம் கற்று வைத்திருக்கிறோம்.
அது மிகச் சிறியது, ஆகவே அது வந்து போவதே நமக்கு தெரிவதில்லை.
அதைப் பற்றிய உணர்வே நமக்கு இல்லை.
ஏதாவது ஒரு விஷயம் நம்மிடமிருந்து போய், அது கடந்தகாலம் என ஆன பின் அல்லது எதிர்காலமாக இருக்கிறது இன்னும் வந்து சேரவில்லை எனும் போது நமக்கு அதைப்பற்றிய உணர்வு வருகிறது.
ஆனால் அது நம்மிடம் இங்கிருக்கும் போது எப்படியோ அதை பார்க்காமல் நாம் சமாளித்துக் கொள்கிறோம்.
நீ கோபமாக இருக்கும்போது நீ அதைப் பார்ப்பதேயில்லை, பின் செய்த பிழைக்காக வருந்துகிறாய்.
பின் அதுவே திரும்பவும் நடக்கிறது, பின் திரும்பவும் நீ வருத்தப்படுகிறாய், மேலும் அது திரும்ப திரும்ப நடப்பதால் நீ சஞ்சலப்படுகிறாய்.
ஆனால் அது வரும்போது நீ குருடாக, செவிடாக, தன்னுணர்வற்றவனாக, விழிப்புணர்வின்றி திடீரென ஆகி விடுகிறாய்.
அந்த இடைநேரம் மிகச் சிறியதாக இருப்பதால் அதை தவற விடும் கவனம் உனக்கு இருப்பதில்லை.
அது நுண்ணியது, அதை முழுமையான விழிப்புணர்வினால் மட்டுமே கைப்பற்ற முடியும்.
முழுமையாக இருக்கும் போது மட்டுமே உன்னால் அதை பார்க்க முடியும்.
உயிர்ப்பிலிருந்து ஒரு எண்ணம் வெளியேறும், வேறொரு எண்ணம் உயிர்ப்புக்குள் வரும், இந்த இரண்டு செயல்களுக்கு நடுவே ஒரு எண்ணமற்ற இடைநேரம் இருக்கும்.
இதுதான் நிகழ்காலம். விழிப்புணர்வு.
நான் உனக்கு திறவுகோலை முழுமையாக கொடுத்து விட்டேன்.
இப்போது நீ இந்த திறவுகோலினால் உனது இருப்பினுள் செயல்பட ஆரம்பிக்கலாம்.
ஓஷோ,,,

No comments:
Post a Comment