Saturday, October 6, 2018

பழம்;-


மரத்தின் பூக்களில் இருந்துதான் காயும், பழமும்,
உண்டாகின்றது.

பூக்களாக இருக்கும் போது, மூக்குக்கும்,
பழமாக இருக்கும் போது நாக்குக்கும்,
ருசியாக இருக்கின்றது.

அந்த இனிப்பு வருவதற்கு முன்
எப்படி இருந்தது....?

பூவில் கசப்பாகவும்,பிஞ்சில் துவர்ப்பாகவும்,
காயில் புளிப்பாகவும், பின்பு மதுரமாகவும்,
ஆகின்றது.


மதுரம் என்பது தான் சாந்தம்.

சாந்தம் வந்தால் எல்லா வம்புகளும்,
போய்விடும்.

பழத்தில் மதுரம் நிரம்பியதும் அது உடனே,
கீழே விழுந்து விடுகின்றது.

அது மாதிரி தான்
இதயத்தின் எல்லா,
இடத்திலும் மதுரம் வந்துவிட்டாலே எல்லா,
பற்றும் போய்விடும்.

புளிப்பு இருக்கும் வரை
பற்று இருக்கும்.

அப்போது
காயை நாம் பறித்தால்,
காம்பில் இருந்து நீர் வடியும்.

அதாவது
மரமே காயை விட்டுவிட,
விரும்பவில்லை.

காயும் மரத்திலிருந்து வர விரும்பவில்லை.

ஆனால்,
மதுரம் நிரம்பி பழமாகி விடும்போது,
தானாகவே விழும்.

இதைப்போன்று தான் "நம்முடைய
மனத்திலும்,
மதுரம் நிறைந்து விட்டால் எல்லாவித,
பற்றுகளும்
போய்விட்டு "இறை நினைவு"
மட்டுமே மிஞ்சும்.

{மீள் பதிவு} Ahamed Bilal from Facebook

No comments: