Sunday, October 21, 2018

#மனித_நேயத்திற்கு_மிகச்_சிறந்த_எடுத்துக்காட்டு


நீடூர் பகுதியின் தமுமுக மருத்துவரணி செயலாளராக இருப்பவர் சகோதரர் அசாருதீன்.

நேற்றைய தினம் இவருக்கு ஒரு போன் வந்தது.அதில் பேசியவர் தங்கள் உறவினர் ஒருவர் தீக்காயத்துடன் பெரியார் அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும்,மேற் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் எனவும் கூறினர்.

மற்ற மற்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கேட்கும் வாடகையை விட மிக குறைந்த வாடகையை அசாருதீன் கேட்டார்.ஆனால் அவரை தொடர்புகொண்டவரோ பிறகு பேசுகிறேன் என கூறிவிட்டு போனை வைத்துவிட்டார்.

இரண்டு மணி நேரமாகியும் அவர்கள் தொடர்பு கொள்ளவில்லை.வேறொரு வேலையாக பெரியார் மருத்துவமனைக்கு சென்ற அசாருதீனுக்கு அவர்களுடைய நியாபகம் வந்தது.

சட்டென அவர்களுக்கு கால் செய்து அந்த குடும்பத்தை நேரில் சந்தித்தார்.அப்போதுதான் புரிந்தது அவர்கள் வறுமையில் வாடுபவர்கள் என்றும் கையில் ரூபாய் 100 கூட இல்லாத நிலையில் உள்ளனர் என்றும்.


உடனடியாக வண்டியை கிளப்பி தீக்காயம் பட்டவரையும்,அவரது குடும்பத்தையும் இலவசமாகவே பாண்டிச்சேரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் அசாருதீன்.

ஆனால் அங்கு சென்ற பிறகு அந்த பாண்டிச்சேரி மருத்துவமனை நிர்வாகமோ ஏற்கனவே பலர் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டு இங்கு சிகிச்சை பெறுவதால் இங்கு புதிதாக அட்மிஷன் போடமுடியாது எனக்கூறி சிகிச்சை தர மறுத்துவிட்டனர்.

நிற்கதியாய் நின்ற அந்த குடும்பத்தை விட்டு செல்ல மனமில்லாத அசாருதீன் உடனடியாக மீண்டும் அவர்களை வண்டியில் ஏற்றி நாகப்பட்டிணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஒருவழியாக அட்மிஷனும் போட்டு சிகிச்சை அளிப்பதற்கான முயற்சிகளையும் முன்னின்று செய்து கொடுத்தார்.

மயிலாடுதுறை முதல் பாண்டிச்சேரி,பாண்டிச்சேரி முதல் நாகப்பட்டிணம் என இரவு முழுக்க தனது நேரத்தை பயணித்திலேயே செலவழித்து இன்று இறைவனின் அருளால் நீடூர் வந்து சேர்ந்தார்.

இடையில் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினரிடம் ஒரு ரூபாய்கூட வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இறைவன் அசாருதீனுக்கும்,அவரது குடும்பத்தாருக்கும் அருள் புரிவானாக!

அசாருதீன் மட்டுமல்ல நம் சமுதாயத்தின் ஏராளமான ஆம்புலன்ஸ் டிரைவர்களின் இலவசமான பல மனிதநேய அர்ப்பணிப்புகள் இந்த சமுதாயத்திற்கு தெரிவதில்லை.

இதுபோன்ற முகநூல் ஊடகங்கள் மூலம் நாம் அதனை கொண்டுசெல்வோம்.
#
சையத் அமீர் பதிவிலிருந்து

சையத் அமீர்
=====================================
 Rilwan Basheer நமதூர் தமுமுக ஆம்புலேண்ஸ் பல ஒட்டுனர்கள் ஒட்டி உள்ளனர் இதை போல தமிழகம் முழுவதும் உள்ள தமுமுக ஆம்புலேண்ஸ் டிரைவர்கள் அழுகிய உடல்களையும் ரத்தம் கொட்டும் சதையுடனும் ஏறாலமான சேவை செய்து உள்ளார்கள்.

1. M.S.M.மிஸ்பா - மாயவரம் TO 25 கிலோமீட்டர் 2 வது கீரிலே சென்றார் நோயாளி க்கு வண்டி குழுங்காமல் செல்ல கேட்டு கொண்டத்துக்கு இனங்க (டிரைவர் ஏற்பாடு செய்யும் வரை தானே வண்டி ஒட்டுவதாக கூறினார் ஆம்புலேண்ஸ் வாங்கிய போது )

2, ஜியாவுதீன் - புங்கணூர் சார்ந்த இருவர் விபத்தில் மரணம் ஜனாஸாவை ஒரே வண்டியில் ஒரே பயணத்தில் எடுத்து வந்தார்.

3.ரியாஸ் - இரவு உடணடி அழைப்பு மயிலாடுதுறை முதல் தொண்டி வரை ஜனாஸா எடுத்து சென்றார் உறவினர் கூட வரமருத்தனர் வண்டியில். இவர் சென்றார் அப்போது ராமாநாதபுரத்தில் 144 தடை போலீஸாரோடு வாக்குவாதம் சண்டைக்கு பின் கொண்டு சேர்த்தார்.

4. M.N.ஃபர்ஜீஸ் - மயிலாடுதுறைலேருந்து தஞ்சை மருத்துவ கல்லூரி பாம்பு கடித்த சகோதரரியை 1: 35 மணிக்கு கடந்து சென்று சேர்தது.

5.M.I.ஹாலிக் - நிறைய தீ காயம் அடைந்த பயணிகளை பார்த்தவர் ஸ்டான்லி மருத்துவமணை பல முறை கொண்டு சேர்த்தவர்.

6.அசாருதீன் - இவரும் பல கேஸ்களை கையான்டு தற்போது செயல்பட்டுவருகிறார்

(அசாருக்கு மாயவரம் அரசுமருத்தவமணை யில் உள்ள காவல்துறை மற்றும் மருத்துவர்களுக்கு நல்ல உறவும் உள்ளது)

அணைவருமே நீடூர் ஆம்புலேண்ஸ் சேவை நோக்கத்துடன் சிற்ப்பாக ஒட்டிவந்தனர்

இன்ஷா அல்லாஹ் இன்னும் சில வாரத்தில் ( HI TECH STRUCTURE - WHEEL TROLLEY TYPE) 24,500.00 மதிப்பில் நவீன ஸ்டரக்சர் மாற்றீ அமைக்கபட உள்ளது.

துவா செய்யவும்

ஆம்புலேண்ஸ் 9786060630

Riyas Deen Misba Noorul Halik .. தமுமுக நீடூர் கிளை

No comments: