நான் ஆலிம் மூன்றாம் ஆண்டு (ஓதி) படித்துக் கொண்டு இருக்கும் போது படித்த ஞாபகம். இறைநேசர்களில் ஒருவர் பெயர் ஞாபகம் இல்லை. அந்த இறைநேசர் நிதமும் கடைமாயான கூட்டு தொழுகைக்கும் மட்டும் பள்ளிவாசலுக்கு சென்று தொழுகையில் கலந்து கொண்டு வீட்டிற்கு வந்து தனிமையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் வந்து இருந்து விடுவார்.
ஒருநாள் மக்களில் சிலர் அவர்களை அழைத்து கேட்டார்கள். நீங்கள் எங்களுடன் பேசுவது, பழகுவது இல்லை. கடமையான கூட்டுத் தொழுகையில் மட்டும் கலந்து விட்டு உங்கள் வீட்டில் தனிமையில் இருக்கிறீர்கள் நீங்கள் யாருடன் பேச மாட்டீர்களா ? உங்களுக்கு இப்படி யாருடனும் பேசாமல் இருப்பது சலிப்பை ஏற்படுத்தாதா ? என மக்கள் கேட்டதற்கு அவர்களின் பதில் கேட்டவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது
.
யார் சொன்னது நான் எனது வீட்டில் தனிமையில் இருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் நான் எனது அறையில் தனிமையில் இல்லை. எனது அறையில் மிகப்பெரிய சங்கையான கூட்டத்துடன் நான் இருக்கிறேன், அதுமட்டுமல்ல நான் யாருடனும் பேசுவதும் இல்லை என்று நீங்கள் கேட்கிறார்கள். எனது அறையில் நான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் எனது இறைவனுடன் நான் பேசுகிறேன். என்னுடன் இறைவன் பேசுகிறான். என்னுடன் பெரிய கூட்டம் பேசுகிறது நான் அவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறேன். கேட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு குழப்பம் ஒருவர் ஒருவரை பார்த்துக் கொண்டார்கள். எப்படிங்க அல்லாஹ் உங்களுடன் பேசுகிறான் ? நீங்கள் இறைவனுடன் பேசுகிறீகளா ? உங்களுடன் மிகப்பெரிய சங்கையான கூட்டத்துடன் நீங்கள் பேசிக் கொண்டு இருக்கிறீர்களா? புரியவில்லையே என மக்கள் கேள்விகளுக்கு...
நான் இறைவனுடன் பேச வேண்டும் என்றால் இறை மறையை (குர்ஆனை) ஓதுவேன் படிப்பேன் அதன் மூலம் எனது இறைவன் என்னிடம் நீங்கள் இதைச் செய்ய வேண்டும். இதைச் செய்ய கூடாது. இப்படி பல... விஷயங்களை கூறுவான் நான் காதுக் கொடுத்து கேட்பேன். இதுபோல நான் எனது இறைவனிடம் பேசுவேன் இறைமறை குர்ஆனை ஓதுவேன்
اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ
(அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்.
(அல்குர்ஆன் : 1:5)
இப்படி நான் உன்னையே வணங்குகிறேன் உன்னிடமே உதவி தேடுகிறேன் என்று நான் கூறும்போது எனது இறைவன் எனது பேச்சைக் கேட்கிறான். இதுபோலவே ஹதீஸ் புத்தகங்களை நான் படிக்கும் போது எனது அறையில் நிகழ்வது என்னத் தெரியுமா ? ஹதீஸ் புகைப்படங்களை நான் விரித்து டன் அங்கே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களும் அவர்களின் தோழர்களும் சூழ இருக்க. தோழர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் பல கேள்விகளை கேட்க கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் பதில் கூறுவார்கள் அந்த கூட்டத்தில் நானும் இருக்கிறேன் நானும் சில கேள்விகளை கேட்கிறேன் அதற்கு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களும் அவர்களின் தோழர்களும் எனக்கு பதில் தருகிறார்கள்.
இதைக் கேட்டவுடன் மக்களுக்கு பெரிய ஆச்சரியத்தில் வாய்மூடி நின்றிருக்க இறைநேசர் தனது வீட்டை நோக்கி நடந்தார்.
நீங்கள் இப்படியொரு சிந்தனையில் குர்ஆனையும் ஹதீஸ் புத்தகங்களை படித்திருக்கிறீர்களா ? போதுவாகவே நீங்கள் ஒரு புத்தகம் படிக்கிறீர்கள் என்றால் அந்த புத்தக எழுத்தாளர் உங்களுடன் பேசுகிறார் என்பதை நீங்கள் உணர்ந்தால் நீங்கள் புத்தகம் வாசிப்பது மூலம் உலகில் பல தலைசிறந்த எழுத்தாளர்களுடன் உங்களால் பேசமுடியும். அதன்மூலம் பலவிதமான அறிவுகள் அனுபவங்கள் உங்களுக்கு கிடைக்கும்.
நான் திருநெல்வேலி புத்தக திருவிழாவில்..
மௌலவி கலீfபா
அஹமது மீரான் சாஹிப்
உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
மேலப்பாளையம்
திருநெல்வேலி
No comments:
Post a Comment