Sunday, October 14, 2018

மிஸ்டர் மெடிக்கோ

by dr.Vavar F Habibullah


மதுரை மருத்துவக் கல்லூரியில்
ஆண் அழகன் போட்டி என்பது
அந்த நாட்களில் நட்சத்திர
அந்தஸ்து பெற்ற நிகழ்ச்சி என்றே
சொல்ல வேண்டும்.

நாகர்கோவிலை சார்ந்தவர்களே
பல வருடங்களாக தொடர்ந்து
மிஸ்டர் மெடிக்கோ டைட்டிலை
தக்க வைத்து இருந்தது என்பது
கல்லூரி பெற்ற பெருமையாகும்.


நமது ஊர் பிரபல மனநல நிபுணர்
நண்பர் டாக்டர் அலக்சன் தேவசகாயம்
பலமுறை மிஸ்டர் மெடிக்கோ
வாக தேர்வு பெற்று இருக்கிறார்.

ஆண் அழகன் போட்டி என்பதால்
வெறும் ஜட்டியே உடை என்பதால்
பெண்கள் அதிகம் நிகழ்ச்சியில்
கலந்து கொள்ள தயங்குவதுண்டு.
இதை தெரிந்த எங்கள் கல்லூரி
பேராசிரியை டாக்டர் சந்திரவதனா
நிகழ்ச்சியில் நடுவராக கலந்து
கொள்ள விருப்பம் தெரிவிக்கவே
ஏராளமான மாணவிகளும் அரங்கில்
குவிந்து விட்டனர்.இதை அறிந்த
பத்திரிகை நிருபர்களும் அங்கு
திரளாக கூடி விட்டனர்.

திரளான பெண்கள் மத்தியில்
தன் திறந்த உடலை, பேர் பாடியை,
அங்க அசைவுகளை வெளி படுத்த
டாக்டர் அலக்சன் தயங்கினார்...
இல்லை மிகவும் வெட்கப்பட்டார்.
அவரை ஸ்டேஜ் பக்கம் அழைத்து
வர நாங்கள் பெரும் பாடு பட
வேண்டியதாயிற்று.

மிகவும் அழகிய பெண்மணி
டாக்டர் சந்திரவதனா பரிசு
வழங்கி பாராட்டு தெரிவித்த
நிகழ்ச்சி அன்றைய பிரபல
பத்திரிகைகளின் தலைப்பு செய்தியாயிற்று.

பேராண்மை மிக்க ஆண்களே
பெண்களை கண்டால் அதிகம்
நாணம் கொள்கிறார்கள் அல்லது
அதிகம் வெட்கப்படு கிறார்கள்.
real alpha men are really
too shy to show their bare
muscular body in front of
women even in sport arena.

Vavar F Habibullah

No comments: