dr habibullah
மருத்துவம் சேவையா
இல்லை வியாபாரமா!
இந்த கேள்வியை இப்போது
எல்லோரும் எழுப்பி வருகிறார்கள்.
அவசர உலகில்
ஆக்சிடெண்ட்,எமெர்ஜென்ஸி
என்பதெல்லாம் நவீன மனித
இனத்துக்கு இயற்கை அளித்த
தண்டனையாகும்.
போர்களில் ஏற்படும் உயிர்
இழப்புகளை விட சாலைகளில் ரோடுகளில் நிகழும் விபத்துகளில் உடல்கள் அடையும் சேதங்கள் சொல்லி மாளாது.உடல்
உறுப்புகளும் சேதம்
அடைந்தால்....!!
சாதாரண நோய்க்கு சாதாரண
மருத்துவம் போதும்.நோய்
கடினமானால்....
உயிர் காக்கும் மருத்துவ
உபகரணங்களே இங்கு காசை
அதிகம் வீண் விரயம் செய்கின்றன.
மருத்துவர்கள் நோய் தீர்க்க
லஞ்சம் பெற்றதாக வரலாறு
இல்லை.
மிகவும் கஷ்டமான நீண்ட கால
படிப்பு, மற்றும் அநுபவம் தான் ஒரு
சிறந்த மருத்துவரை உருவாக்க
உதவுகிறது.ஐஏஎஸ்,ஐபிஎஸ் படிப்பு
கூட ஒரு இண்டர்வியூ வில் முடிந்து விடும். ஆனால் மருத்துவம் முழுக்க
எழுத்து தேர்வை விட நேர்காணல்
தேர்வுகளே தகுதியை நிர்ணயம் செய்கிறது.இதனாலேயே
சில டாக்டர்கள் இப்போது ஐஏஎஸ்
பக்கம் தாவி விடுகிறார்கள்.
உலகின் எந்த மூலைக்கு
சென்றாலும் டாக்டர்கள்
அங்குபரீட்சையில் பாஸ்
செய்தால் மட்டுமே மருத்துவம்
பார்க்க இயலும்.
மேலை நாடுகளில் டாக்டர்களை
இன்றும் வெகு எளிதில் பார்க்க
முடியாது.குறிப்பிட்ட டாக்டரைக்
காண சில நேரம்...மாதக்
கணக்கில் காத்திருக்க வேண்டும்.
மனித உடல் சார்ந்த தொழில்
இது,என்பதால் மற்ற தொழில்
களுடன் இதை ஒப்பிடுவது
சரியாக இருக்காது.
நோயின் தன்மையை முழுதும்
அறிந்த ஒரு மருத்துவ சயிண்டிஸ்ட்
நோயாளி புரியும் மொழியில் பேசி
நோயின் தன்மையை விளங்க
வைப்பது என்பது கூட ஒரு கலை
உணர்வு என்றே சொல்ல வேண்டும்.
ஆடினால்,பாடினால்,நடித்தால்,
எளிதில் கை தட்டல் பெற இயலும்.
மருத்துவம் என்றும் கை தட்டல்
பெறும் தொழில் அல்ல.
ஹோட்டல் என்றால் பிடித்த உணவு
தியேட்டர் என்றால் பிடித்த படம்
மால் என்றால் பிடித்த பொருள்
இவற்றை பெற அதிகம் பணம்
செலவு செய்யும் நாம் மருத்துவம்
என்று வந்தால்....!
மருந்துகளின் விலையை விட
நோய் உபகரணங்களின்
விலையை விட இந்தியாவில்
மருத்துவர் பீஸ் மிகவும்
குறைவு தான்.....
சில டாக்டர்கள்
முடி திருத்துபவர்களை விட
குறைந்த பீஸ் தான் இன்றும்
நம் நாட்டில் பெறுகின்றனர்.
மருந்து கம்பெனிகளின் கட்டுப்பாட்டிலும்,மருத்துவ
இன்சூரன்ஸ் கம்பெனிகளின்
கைகளிலும் தான் மருத்துவ
உலகம் இன்று சிக்கி தவிக்கிறது.
அப்பாவி மருத்துவர்கள் இதன் காரணமாக
அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்
என்பது தான் முழு உண்மை.
பள்ளி,கல்லூரிகளில் நாம்
செலவிடும் பணத்தில் சிறு
அளவு கூட நம் குழந்தைகள்
ஆரோக்கியம் பேண நாம் செலவிடுவதில்லை.
ஏழைகளுக்கு அரசு பள்ளிகள்
இருப்பதை போலவே அரசு
மருத்துவமனைகளும் செயல்
படுகின்றன.அரசை நடத்துபவர்கள்
கூட இங்கு சிகிச்சை பெறுவதில்லை.
ஃபைவ் ஸ்டார் நோயாளிகள் இன்றும்
ஃபைவ் ஸ்டார் மருத்துவமனைகளை
மட்டுமே நாடி செல்கின்றனர்.
இவர்கள் பணச் செலவைப் பற்றி
கவலை கொள்வது இல்லை.
ஏழை பணக்காரன் பாகுபாடுகள்
மிகவும் அதிகம் உள்ள நம் நாட்டில்
தரமான உயர் தர மருத்துவ சிகிச்சை
குறைந்த செலவில் ஒவ்வொரு
குடிமகனுக்கும் கிடைக்கச் செய்வது
டாக்டர்களின் கைகளில் இல்லை
அரசின் கைகளிலேயே இருக்கிறது.
குறைவாக பீஸ் வாங்கும்
டாக்டர்களை சமூகம்
மதிப்பதில்லை.
பீஸ் வாங்காவிட்டால்....
உறவினர்களே திரும்பி பார்ப்பது இல்லை.வாங்கும் பீஸை வைத்தும்,
காத்திருக்கும் நேரத்தை பொருத்தும்
தான் டாக்டரின் தகுதிகள் இங்கு
நிர்ணயம் செய்யப் படுகிறது.
எங்கள் அகத்திய முனி
குழந்தைகள் மருத்துவமனையில்
ஸ்பெசலிஸ்ட் ஆனாலும் சூப்பர்
ஸ்பெசலிஸ்ட் ஆனாலும் இருபது
ரூபாய் தான் பீஸ் வாங்குகிறோம்.
ஏழை பணக்காரன் என்ற
பாகுபாடுகள் இங்கு இல்லை.
ஃபைவ் ஸ்டார் ஸ்டைலில்
மருத்துவமனை இருந்தும்
ஹை டெக் வசதிகள் இருந்தும்
சிறந்த சூப்பர் ஸ்பெசலிஸ்ட்கள்
பல இருந்தும் பீஸ் குறைவு
என்பதால் மட்டுமே எனது
பணக்கார நண்பர்கள் இந்த
மருத்துவமனையை
நாடுவதில்லை. சூப்பர் சேவை இருந்தும், பீஸ் குறைவு என்பதை இவர்கள் அவமானமாக கருதுவதே இதற்கு காரணம்.பணம் படைத்த
கணவான்களை நாங்கள் பொருட்
படுத்துவதும் இல்லை.
dr habibullah
Vavar F Habibullah
No comments:
Post a Comment