Friday, October 19, 2018

பாலினப் பாகுபாடு


ஆண் மாணவர்கள் என்றாலே
தவறு செய்பவர்கள் அல்லது
தவறான நோக்கத்துடன் தவறான
துறையை தேர்வு செய்பவர்கள்
என்ற எண்ணம் மருத்துவக்
கல்வித் துறையை சார்ந்த
சில பெண் பேராசிரியைகளிடம்
இன்றும் உண்டு.

மருத்துவம் படிக்கும் மாணவர்
ஒவ்வொரும் தங்கள் ரோல்
மாடல்களாக சிலரை தேர்வு
செய்வதுண்டு.



நான் OG ஸ்பெசலிஸ்ட்
ஆக ஆசை பட்டதுண்டு.
பிசவம் நோய் இல்லை.நார்மல்
டெலிவரியில் டாக்டருக்கு பெரிய
வேலை இல்லை.சிசேரியன்,
கருப்பை ரிமூவல் மட்டும் தான்
பெரிய சர்ஜரி.நன்றாக ஷைன்
பண்ணலாம்.

டாக்டர் லஷ்மணசாமி
முதலியார் தான் அப்போது
என் ரோல் மாடல்... காரணம்
அந்த காலத்தில் தமிழகத்தில்
சிறந்த மகப்பேறு நிபுணர் அவர்.
எலிசபத் மகாராணிக்கு
பிரசவம் பார்த்த முதல் இந்திய
டாக்டர் என்ற பெருமையும்
இவருக்கு உண்டு.

நான் மதுரை
மருத்துவக்கல்லூரியில்
மாணவனாக நுழைந்த நேரம்
டாக்டர் பாஸ்கரராவ் மகப்பேறு
துறை பேராசிரியராக இருந்தார்.
படு கில்லாடி இவர்.என் ஆர்வத்தை
புரிந்துக் கொண்ட இவர் என்னை
ஊக்கப் படுத்தினார்.

எம்பிபிஎஸ் முடித்த கையோடு
மகப்பேறு துறையில் சீனியர்
ஹவுஸ் சர்ஜனாக திருநெல்வேலி
மருத்துவ கல்லூரியில் சேர்ந்தேன்.
எங்கள் காலத்தில் ஒரு வருடம்
மகப்பேறு துறையில் சீனியர்
ஹவுஸ் சர்ஜன்ஸி முடித்தால் தான்
டிஜிஒ அப்ளை செய்ய முடியும்.
கையில் ஆர்டரோடு சென்ற
என்னை அந்த துறை பேராசிரியர்
உட்பட அனைவருமே வியப்போடு
வரவேற்றனர்.

“என்ன தம்பி...பி.வி டெஸ்ட்
பண்ணலாம்னு நினைத்து தான்
இந்த டிபாட்மெண்ட்டுக்கு
வந்தியா!”
பேராசிரியையின் சற்று தரம்
தாழ்ந்த விமர்சனம் என்னை
தடுமாற வைத்தது.

மேல் நாடுகள் போல் ஆண்
மெடர்னிடி ஸ்பெசலிஸ்ட்கள்
இந்த துறையில் உருவாகாமல் போனதற்கும்,தலை சிறந்த
மருத்துவ மாணவர்கள் கூட
இந்த துறையை நாடாமல் விலகி
போவதற்கும் இந்த முரண்பாடே
காரணம்.நாகர்கோவில் நகரில்
தலை சிறந்த ஆண் மெடர்னிடி
ஸ்பெசலிஸ்ட்கள் அறவே இல்லாத
நிலைக்கும் இதுவே காரணம்.
once upon a time Dr.Charles
MBBS MRCOG FRCOG(LOND)
was the only practising O&G
specialist at nagercoil.He was
the former Medical Supt.of
CSI Mission Hospital Neyyoor.
really a gifted obstetrician

Vavar F Habibullah

No comments: