தகவல் செந்தமிழன் கதிரேசன்
அமெரிக்காவில் மகனைக் கொன்ற குற்றவாளியை கட்டி அரவணைத்த தந்தை: நெகிழ்ந்த நீதிமன்றம்
கென்டக்கி: அமெரிக்காவில் மகனைக் கொன்ற குற்றவாளியை தந்தை கட்டி அரவணைத்து மன்னித்த சம்பவத்தைக் கண்டு நீதிமன்றமே நெகிழ்ந்துபோனது. கென்டக்கியில் உள்ள லெக்ஸிங்டன் பகுதியில், கடந்த 2015-ம் ஆண்டு 22 வயதான சலாவுதீன் ஜிட்மவுட் எனும் பீட்ஸா விநியோகிக்கும் நபரிடம் கொள்ளையடித்த 3 பேர், அவரது கழுத்தை அறுத்துக் கொன்றனர். மூன்று பேரும் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அப்போது, உயிரிழந்த சலாவுதீனின் தந்தை ஜிட்மவுட், தமது மகனின் கழுத்தை அறுத்தது யார் எனக் கேட்டு, குற்றவாளிக் கூண்டில் இருப்பவரை நெருங்கினார். தமது செயலுக்கு வருந்தி, கண்கலங்கி கொலையாளி மன்னிப்பு கேட்டதை அடுத்து, அவரை கட்டி அணைத்த கொலையுண்டவரின் தந்தை, தமது மகன் மற்றும் மனைவி சார்பில் மன்னித்துவிட்டதாக் கூறினார். குரான் அமைதியையே வலியுறுத்துவதாகவும், அவர் குறிப்பிட்டார். அப்போது குற்றவாளியும் கண்ணீர் விட்டு அழுதபோது, நீதிபதி உள்ளிட்ட அங்கிருந்த பலரும் கண்கலங்கினர்.
தகவல் செந்தமிழன் கதிரேசன்
No comments:
Post a Comment