தமிழின்
பக்தி இலக்கியங்களை
ஆய்ந்தவர்கள்
தமிழ் ஒரு பக்தி மொழி
என்கிறார்கள்
புறநாநூறு போன்ற
போரிலக்கியங்களை
ஆய்ந்தவர்கள்
தமிழ் ஒரு வீர மொழி
என்கிறார்கள்
அகநாநூறு காமத்துப்பால்
போன்ற
காதல் இலக்கியங்களை
ஆய்ந்தவர்கள்
தமிழ் ஒரு காதல் மொழி
என்கிறார்கள்
வள்ளுவம் தரும்
அறிவியல் தடங்களை
ஆய்ந்தவர்கள்
தமிழ் ஒரு அறிவியல் மொழி
என்கிறார்கள்
குறள்வழி அறம் கண்டு
பிரமித்தவர்கள்
தமிழ் ஒரு அற மொழி
என்கிறார்கள்
இப்படியாய்
வாழ்க்கையின்
அத்தனையையும் கொண்ட
தமிழை
அவரவர் கண்கள் போல்
கண்டு
போற்றிப் புகழ்கிறார்கள்
குருடர்களும் யானையும்
கதைதான்
என் நினைவில் வருகிறது
தமிழ்
ஒரு முழுமை மொழி
தமிழில் இல்லாதது
தரணியில் இல்லை
அதைத்
தமிழன் அறியாததுதான்
தமிழுக்குத் தொல்லை
அன்புடன் புகாரி
No comments:
Post a Comment