Saturday, November 4, 2017

என்ன செய்வது ...?

வேலையை இழுத்துப்போட்டு செய்து பழக்கப் பட்டுவிட்டாலும் கூட ஆயிரம் வேலைகள் காத்திருந்தாலும் கூட சில சமயங்களில் 'இப்ப என்ன செய்ய' என்று தோன்றுவது தவிர்க்க முடியாத ஒரு தோன்றல்.
இது ஒரு தன்னிலை கழிவிரக்கம் என்பதில் ஐயமில்லை.
காரணம் என்ன?
செய்யும் தொழிலை வழிபாடாய் செய்திருக்க புண்ணியங்கள் வந்து குமியலாம்.
மாறிவரும் அரசியல் சமூக மாற்றங்கள் சாதாரண மனிதனின் சமசீர் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றிவிட்ட நிலையில் எப்படியாவது பணம் சேர்க்கவேண்டும் என்பதே ஒற்றைக் குறிக்கோளாக இருக்க சிலர் இன்னும் 'இப்ப என்ன செய்ய' என்று எண்ணுகிறோம்.
என்ன செய்கிறோம் ?
வேண்டியதை விட்டுவிட்டு வற்புறுத்தல்களை செய்வது.
விருப்பத்தை விட்டுவிட்டு வருமானத்திற்காக செய்வது.
தன்னிலை மறந்து வறட்டு கவுரவத்திற்காக செய்வது.
எல்லாம் அவசர கதியில் ஓடும் கால மாற்ற காட்டாற்றில் சிக்கிய காய்ந்த மரக்கடை போல் இழுத்து செல்லப் படுகிறோம்.
கஷ்டப்பட்டு உழைத்துப்பெற்ற உணவைக்கூட மென்று உண்ண நேரம் இல்லாமல் அவசரகதியில் விழுங்கி புதிய நோய்கள் புதிதாக தோன்றுவதாக அலுத்துக்கொள்கிறோம்.
இன்னும் பல பாக்கியுண்டு.
என்னதான் செய்யலாம் ?

சிறிதாய் செய்தாலும் செய்வதை திருந்த செய்யலாம்.
மனதுக்கு பிடித்ததை மட்டுமே செய்யலாம்.
தனிமனித வருமானத்திற்காக அல்லாமல் சமுதாய நலனுக்காக செய்யலாம்.
அடுத்தவர்களை பார்த்து அவர்களைப்போல வாழவேண்டும் என்று எண்ணாமல் நாமாக தெளிவாக இருக்கலாம்.
படைத்தவன் விரும்பும் காரியங்களை செய்துகொண்டே இருக்கலாம்.


ராஜா வாவுபிள்ளை

No comments: