குவைத் அதிரக்கண்டேன் தோழா...!
அதிர்ந்தது நிலம் ஒரேயொருமுறை நேற்றிரவு...! ஒட்டுமொத்தமாக அத்தனை மனிதரும் விதி விடும் வழி தேடி வீதிக்கு வந்தார்கள் சப்தம் கூட்டியவர்களாக!
எனது... தனது... உனது... என்று தேடியதை எல்லாம் ஆங்காங்கே அப்படியே விட்டுவிட்டு ஒரே ஓட்டத்தில் அத்தனைக்கும் பொதுவாய் இருக்கின்ற வீடான வீதிக்கு வந்தவனர் அநேகரும்!
வந்தவர் முகத்தில் எல்லாம் ஒரே பீதி! கீரியின் பிடியில் இருந்து தப்பிய கோழியை போல ஒரே உதறல்! வந்த சிலரில் மேல் சட்டை கூட அணியாது விட்டு வந்தவரும் அடக்கம்! இயற்கையின் உபாதை விஞ்சியது சிலபேருக்கு வாயால் மொழிந்து கொண்டனரே தவிர தவறியும் தன் வசிப்பிடம் செல்ல மனமில்லை! காரணம் மரண பயம்!
பலகுரலில் பல மொழியில் பல்வேறு சம்பாசனை செய்து அழைத்தனர் அவரவர் இறைவனை...! இவையனைத்தையும் கேட்டு கொண்டிருந்தான் அந்த "தனி ஒருவன்" என்பதென்னவோ சத்தியம் சாத்தியமும் கூட!
எவ்வளவு சுயபலம் பேசினோம்! எத்தனை சுயநலம் கொண்டோம்! பேசிய அத்தனையும் பஞ்சு போல் பறக்க....! அனைத்தையும் விட்டு "அவனை" மட்டுமே அழைத்தனர் அத்தனை பேரும் இப்படியாக "என் இறைவா எங்களை காப்பாற்று" என்று!
ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை என்பதுபோல் ஆபத்து வந்தால் மட்டுமே அநேகரும் உணர்கிறோம் இறைவனின் மகிமையை.!
தேடிய வீடும் தேர்ந்தெடுத்து வாங்கிய பொருளும் விழப்போகிறது நம் தலைமீது எனும் நிலை வரும்போது! அவையனைத்தும் கனம் கொண்ட ஆபத்தாய் காட்சி தர! அபாயம் தவிர்க்க அபயம் வேண்டுகிறோம் பயத்துடன் ஆண்டவனிடம்!
பலப்பொழுதும் வெறும் பலம் பேசித்திரியும் நம் பலம் எதுவென்றறிக!
தவக்கல்த்து அலல்லாஹ்...! ஃபீஅமானில்லாஹ்...! 💕
Samsul Hameed Saleem Mohamed
No comments:
Post a Comment