அகங்காரம் உள்ளவன் தன்னையே ராஜாவாக
நினைத்துக்கொண்டு பிறரை தனது அடிமை
போல நினைத்து செயல்படுபவன்..
அகங்காரம் இருப்பவனால்,பிறர்மீது நல்லஎண்ணம வைக்கமுடியாது.
, அகங்காரம் வந்து விட்டால் அங்கே நன்மை,தீமையை பகுத்தறியும் சக்திஇருக்காது .
அகங்காரம் இருக்குமிடத்தில் ஆவேசம் இருக்கும்.
அகங்காரம் இருக்கும் இடத்தில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்காது.. இரக்கத்திற்கும்,கருணைக்கும் அங்கே வேலையில்லை..
. வாயில் எப்பொழுதும் பிறரை மதிக்காத வார்த்தைகளே வெளிவரும்..
இதுவே வெளி அகங்காரம்.
வெளியே சிரித்துவிட்டு மனதிற்குள் இந்த மாதிரி நிலைவெளிப்பட்டால் அது உள் அகங்காரம்.என்னதான்
வெளியே சிரித்தாலும் உள் அகங்காரம் ஒருநாள் வெளிப்பட்டே தீரும்..
அகங்காரம் உள்ளவன் நான், எனது என்ற
வார்த்தைகளை அதிகம் உரக்கச் சொல்லி பிரயோகிப்பான்..
சரி, இந்த அகங்காரம் எதனால் உண்டாகின்றது.
உண்மையை சொல்லப்போனால் அகங்காரம் தாழ்வு
மனப்பான்மையால் உண்டான ஒரு சைக்கோ தன்மை..
பல இடங்களில் தாழ்த்தப் பட்டிருப்பதால் ஏற்படும் உணர்வு.
இந்த உணர்வு அதிகமானாலும் அதாவது உயர்வாக
தன்னை நினைக்கும் மனப்பான்மை அது அதிகமானாலும்
அங்கே அகங்காரம் தலை தூக்கும்.
அப்படி அதிகரிக்கும பொழுது பிறரை மதிக்காத தன்மை தனக்குள் உருவாகும்.
.எனவே, வளைந்து கொடுத்து போகுமிடத்தில் வளைந்து
கொடுத்துப்போனால் தாழ்வு மனப்பான்மையும் வராது..
அதிகமாக வளைந்து தன்மானம் போகாமல் இருத்தல் நலம் .
தான்தான் பெரியவன் என்ற உயர்வான அகங்காரமும் வராது..
.. அகங்காரத்தை போக்க வழி இருக்கின்றதா?
கண்டிப்பாக இருக்கின்றது..இந்த உடல் கூட எனக்கு சொந்தமில்லை..
இதை இந்த உலகத்தில் விட்டுச்செல்லவேண்டும் என்ற நினைவு இருக்க
பிறர்மனதை புண்படுத்தாமல் இருக்க கவனம் வைக்கவேண்டும்.
பிறரின் அவமதிப்பு நிறைந்தவார்த்தைகள் தனக்குள்
பாதிப்பை ஏற்படுத்தாதவாறு கவனமாகவும் இருக்க வேண்டும்.
.இல்லாவிட்டால் அந்த அவமதிப்பு
வெறியாக மாறி அகங்காரமாக மாறிவிடலாம்.
எனவே,எல்லோரிடமும் எப்பொழுதும் அன்பாக
உள்மனதிலிருந்து நடக்கவேண்டும்.
உள்ளும் புறமும் ஒரேமாதிரி அன்பிருந்தால்
உள்ளேயும் அகங்காரம் இருக்காது.அது வெளியிலும் அகங்காரமாக வெளிப்படாது. அன்புதான் அகங்காரமற்ற நிலை.. அன்புதான் அனைவரையும் ஒன்றிணைக்கும் ம...
Abdul Sukkur
No comments:
Post a Comment