பொருளும் பொருள் சார்ந்தவை மட்டுமே வாழ்க்கையின் தேடல் என்றாகிப்போன பொருளை ஆதாரமாக கொண்டு செயல்படும் உலகில் கல்வியை கற்பிப்பதும் காசுக்குதான் என்பதில் ஆச்சர்யம் எனக்கு எழவில்லை.
உங்களுக்கும் அதேதான் எண்ணமென்றே எண்ணுகிறேன்.
மேலும், பொருளீட்டுவது மட்டுமே கல்வி கற்பதன் நோக்காமாக கருதப்படுவதே தற்கால மனிதர்களிடையே காணப்படும் வேற்றுமைகளின் முக்கிய காரணமாக இருக்கிறது என்பதிலும் எனக்கு சந்தேகமில்லை.
சாராய வியாபாரிகளும் கொடுவட்டி தடியன்களும் கல்வித்தந்தையாக வலம்வரும் நாட்டில் அரசாங்கமே இலக்குவைத்து சாராயம் விற்கிறது. சாராய ஆலைகளின் அதிபதிகள் ஆட்சி அதிகாரத்தை தடிகொண்டு கையிலெடுத்து தக்கவைத்துக்கொள்ள யார் பெரியவனென யாருக்கோ காட்டுவதற்கு நாட்டையும் நாட்டு மக்களின் மானத்தையும் சோதனை என்ற பெயரில் நடத்தி அல்லது நடத்தப்பட்டு நாடகமா அல்லது நடப்பா என்பதை நாட்டுமக்களின் கற்பனைத்திறன் வளர்க்க விட்டுவிட்டு மானம் மரியாதையை கப்பலில் ஏற்றிவிடுகின்றனர்.
புதுமைகள் தேவைதான். அது அரசால் நடைமுறைப்படுத்த போதிய திட்டமிடலும் மென்மையான போக்கும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். எதிரி நாட்டுப் படையெடுப்பை முறியடிக்க போர்க்கால நடவடிக்கை அவசியம் மாற்றுக்கருத்தில்லை. புதிய முறைகளை மக்களிடம் தீவிரமாக
அரசே எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்படுதல் நியாயமா?
எதைத்தான் கற்பிப்பது?
அவர்களாகவே ஆயிரம் துறைகளை உருவாக்கி ஊடகங்களில் கோடிகள் கொடுத்து விளம்பர உக்தியால் மதிமயங்கி பணம் பறிக்கிறார்கள்.
அங்கே 'கற்றவர்கள்' என்ன மாதிரியாக உருவாக்கப் படுகிறார்கள்? அதற்குத்தக நிற்பார்களா !
ஆம். பொருளை எவ்வாறெங்கிலும் தேடுவதில் ஒற்றைக்காலில் நிற்பார்கள்.
அறவழியில் பொருள் தேடினால் மட்டுமே எல்லாமே இன்பமயமாகும்.
ஈட்டிய பொருளும் சேர்த்த பணமும் வேண்டுமானால் தனிமனிதனுடையதாக இருக்கலாம் ஆனால் அதற்கான வழிவகைகளும் கட்டமைப்பும் சமூகத்தினுடையது.
சமூகத்திற்கு பிரதிபலனாக தனிமனிதன் என்ன செய்கிறான்? தனிமனிதனால் என்னதான் செய்துவிடமுடியும்! வரியளக்கிறான் அரசுக்கு. நேரடியாகவும் மறைமுகமாகவும் தனிமனிதனின் வருமானத்தில் பெரும்பகுதி வரியாக விதிக்கப்பட்டு அரசு கஜானாவில் நிரப்பப்படுகிறது. சிறுதுளி பெருவெள்ளமாகிறது அதையே திரும்பவும் மொத்தமாக சமூக கட்டமைப்புகளை உருவாக்க அரசு பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் தனிமனித வருவாயும் வாழ்க்கை தரமும் உயரவேண்டும். இதுவே சமூகப்பொருளாதாரத்தின் அடைப்படை தத்துவம் .
ராஜா வாவுபிள்ளை
No comments:
Post a Comment