கையில் பைல்
தோளில் லேப் டாப்
காலில் ஷூ
கழுத்தில் டை
புல் கை சர்ட்
அழகிய உயர்தர பேண்ட்
ரோட்டில் 11.30 மணி மதியம் கொஞ்சம் வேகமான குளிர்கால வெயிலில் நடந்து வந்துகொண்டிருக்கிறார் ..வழியில் போகும் கார்களை கை காட்டுகிறார் யாரும் நிறுத்தல
சற்று ரஷ் இல்லாத இடமென்பதால் சற்று தள்ளி அவசரபார்க்கிங்கில் என் காரை நிறுத்தச்சொன்னேன்
சற்று நடையில் வேகமெடுத்தவர் காரில் வந்து ..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ...யெனச்சொல்லி ஹவ் ஆர் யூ சார் ..யென ஆங்கிலத்தில் பேச ...
வஅலைக்குமு்ஸ்ஸலாம் வரஹ் ..யென பதில் தந்து ..அல்ஹம்துலில்லாஹ் ...பிரதர் ..யென பதில் தந்து
யெஸ் பிரதர் ...கஹா ஜானா ஹே ...எங்க போகனுமென இந்தியில் கேட்டேன்
ஐ டோண்ட் நோ ஹிந்தி சார் ..ஒன்லி இங்லீஷ் மளையாளம் தமிழ் ...யென்றார்
கை கொடுத்தேன் ..கார்ல ஏறுங்க யென்று தமிழில் சொன்னதும் அவருக்கு மகிழ்ச்சி காரில் ஏறினார்
எங்க போகனும் நீங்க ..யென்றேன்
என் பெயர் ஷபீர் ...நான் சேலம் அருகிலுள்ள கிராமத்துக்காரன் எனக்கு ஹிந்தி அவ்வளவா தெரியாது ..குரைதிய்யாத் துல நண்பர் ஹவுஸ் டிரைவராயிருக்கார் அவரிடம் தங்கி வேலை தேடி வருகிறேன் சார் ..
அப்படியா ரெம்ப தூரமாச்சே டாக்ஸிக்கே ஒரு தொகை கேட்பாங்களே எப்படி தோஹா வந்திங்க யென்றேன்
அரசாங்க பஸ்ல 5 ரியால் கொடுத்தா எங்க வேணாலும் இறங்கலாமில்லயா அதுல வந்தேன்
சரி ....ஷபீர் மொதல்ல நாம லுஹர் தொழுவோம் காய்கறி மார்க்கெட் பள்ளிவாசலில் பிறகு பக்கத்துலயேயிருக்க MRA ரெஸ்டாரெண்டுல சாப்டுவோம் சாப்டுட்டே பேசுவோம் ..யென்று
டிரைவரை அதே ரோட்டில் உள்ள பள்ளிவாசல் நோக்கி கார விடச்சொல்லி இருவரும் தொழுது விட்டு மதிய உணவும் அவரோடு டிரவைருக்கும் சேர்த்து வாங்கிக்கொடுத்து உண்டு கொண்டே ...
தான் விசிட்டிங் விசாவில் வந்து கிட்டத்தட்ட இரண்டரை மாதமானதையும் குவாலிட்டி இன்ஜீனியராயிருப்பதால் அனுபவமில்லாத புதியவனென்ற முறையில் எங்கு போனாலும் வேலையில் சேர்க்க அதிகம் யோசிக்கிறார்கள் முயற்சித்து முயற்சித்து தோற்றுப்போனதாய் மனசு வருந்துகிறது யுன்னும் பத்து தினமேயிருப்பதால் விசா முடிவதற்கும் அதாவது அடுத்த வியாழன் இரவு ஊர் திரும்ப டிக்கெட் தயாராயிருப்பதையும் அதற்குள் ஏதாவது வேலை கிடைக்காதா யென ஆசிப்பதையும் சொல்லி முடித்தார்
ஹோட்டலை விட்டு வெளியே வந்தோம் ...
ஷபீர் ..எனக்கு அவசரவேலையிருக்கு தவறாய் நினைக்க வேண்டாம் வாருங்கள் உங்களை பஸ் ஸ்டாப்பில் விட்டுவிடுகிறேன் யென்று ..சொல்லி
தேவயான ஆறுதலும் ஊக்கமும் தந்து அவரின் கை செலவுக்கு 150 ரியாலும் கொடுத்து ...இன்ஷாஅல்லாஹ் இறைவன் அருள் செய்வான்
மன் ஜத்த வஜத ...முயற்சி திருவிணைதரும் ..யென்ற தமிழ் மொழிக்கேற்ப
முயற்சியுங்கள் ...இந்த பயணத்தில் வெற்றி கிடைக்காவிட்டாலும் கூட இதையே ஒரு அனுபவமாய் எடுத்து ..............ஊரில் ஏதாவதொரு கம்பெனியில் குறைந்த சம்பளமெனினும் வேலையில் சேர்ந்து குறைந்தது 3 வருட அனுபத்தை பெற முயற்சியுங்கள்
காலம் கனியும் கவலைவேண்டாம் ..யென்ற ஆறுதலோடு கை கொடுத்து விடை பெற்றேன்
மிகுந்த தூரம் அவர் போகுமிடம் ..என் அவசரத்தில் போய் விட்டுவிட முடியாத வருத்தம் தான் ..இருப்பினும்
மனிதன் சூழ்நிலைக்கி அடிமை ...அதே நேரம்
நம்மாலான ஆணித்தரமான ஆறுதல் அவருக்கு பயன் தருமென்ற நம்பிக்கையோடு ........
படித்தால் மட்டும் போதுமா .............இல்லை
எங்கள் ஆசிரியர் திரு.மணியன் சொல்வார் ...டேய் தம்பிகளே
இந்த பாடமெல்லாம் ஒரு வழிகாட்டி கல்லு மாதிரி தான் ...........நீங்க போய்ச்சேருமிடத்த காட்டுமே தவிர
உங்களோடு நடந்தெல்லாம் வராது ......மாறாக
அது காட்டும் வழிய பிடிச்சு முயற்சித்து முயற்சித்து நடந்து நடந்தே நீங்க தான்டா போய்ச்சேரனும்
அதற்கான அனுபவத்தை உங்கள் நடை தரும் ...அதை நீங்க அப்ப தான் உணரமுடியும் ..இப்ப நான் சொல்வது புரியாது ..யென்பார்
இதான் உண்மைனு .....இப்ப என் அனுபவம் சொல்கிறது...........இதையே
வேலைதேடும் தம்பி ஷபீருக்கும் இந்த பதிவின் மூலம் மற்றவர்களுக்கும் சொல்கிறேன்
தம்பிகளே ...............
படித்து ஊரில் ஏதாவதொரு கம்பெனியில் குறைந்தது இரண்டு வருடமாவது வேலை செ்ய்து பழகி அனுபவப்பட்டு
அரப் நாட்டிற்கு வாருங்கள் ......பலனை அனுபவிப்பீர்கள்...நான் சொல்வது சரியா தவறாயென்பதை என்னோடு நட்பிலுள்ள அரப்நாட்டு மற்றும் நமதுநாட்டு
பல அனுபவசாலிகள் யுன்னும் சொல்வார்கள் சொல்லுங்கள் நட்புக்களே அனுபவசாலிகளே
ஷபீருக்காக துஆ செய்வோம் பிறார்த்திப்போம்.
Iskandar Barak
No comments:
Post a Comment