Sunday, March 9, 2014

சில நேரம் பார்க்கிறேன் நான் அந்தப் பார்வைதான் இந்தக் கவிதை ஆகிறது

வைகறை வெளிச்சமிடும்போது
மெழுகுவர்த்தியை அணைத்துவிடு,
இதோ உன் கண்களில்
வைகறை இப்போது..!!

-மெளலானா ரூமி

உன் ஒளியில் கற்கிறேன்
காதலிக்கும் கலை

உன் அழகில் கற்கிறேன்
கவிதைகள் எழுத

யாருமே உன்னைப் பார்க்காத
என் நெஞ்சினுள் ஆடுகிறாய் நீ

சில நேரம் பார்க்கிறேன் நான்
அந்தப் பார்வைதான்
இந்தக் கவிதை ஆகிறது
-மெளலானா ரூமி

பொறுமையின் செவிகளால் கேள்
கருணையின் கண்களால் பார்
காதலின் மொழியால் பேசு...!!

-மெளலானா ரூமி

வாழ்நாள் கழிந்தது
இறைவனின் பக்கம் இன்னமும்
முகம் திருப்பவில்லை நான்

அந்தப் பேரின்பப் பொழுதுகளைத்
தேடவில்லை நான்
வாய்ப்புகள் மறைந்துவிட்டன

இதயத்தின் அழுக்கை எப்படிக் கழுவுவேன்?
நான் செய்த அங்க சுத்திகள்
கண்ணீரைப் போல் தாபம் கொண்டிருக்கவில்லை

பாவத்தின் இருளைப்
போக்கவில்லை என் கண்ணீர்

உண்மை மனிதர்களின் வரிசையில்
ஒளிரவில்லை என் முகம் - அமீர் குஸ்ரு

வலிச்சுச்சு,
அழுதேன்
சந்தோசமா இருந்துச்சு,
சிரிச்சேன்
தோணுச்சு,
எழுதினேன்.
அம்புட்டுத்தேன்..

இந்தப் பெருவாழ்வின் எச்சமிச்சங்கள்தானே
கவிதை இலக்கியம் எல்லாம்...!!

நிசா மன்சூர்   Nisha Mansur
================================================

நீ புரட்டிக் கொண்டிருக்கும் நூறு நூறு நூல்களையும்
தாள்களையும் நெருப்பில் போட்டுவிடு;
உன் இதயத்தை நண்பனின் ஒளி கொண்டு பூஞ்சோலை ஆக்கிவிடு...!!

-மெளலானா ரூமி

 ரூமி என்னும் சூபி ஞானி


seasonsali: ABU HAMID AL-GHAZALI

No comments: