Thursday, March 13, 2014

கட்சிகளுக்கு செலவில்லாமல் நல்ல விளம்பரம் கிடைக்கிறது .

தேர்தல் காலங்களில் விரும்பாத கட்சிகளை அதிகமாக சாட, ஏசி பேச  அந்த கட்சிகளுக்கு  செலவில்லாமல் நல்ல விளம்பரம் கிடைக்கிறது .
அடுத்தவரை மரியாதை குறைவாக பேச அதுவே உங்கள் மீதும் திரும்பும்
அடுத்தவனை கேவலப் படுத்துபவன் தானும் கேவலப்படுத்தப் படுவான் என்பதனை அறிய வேண்டும் .
அது உடனே நிகழும் அல்லது சில நாட்கள் சென்று நிகழும் .

ஒரு கட்சியை ஆதரிப்பவர்கள் உங்கள் கட்சியின் குறிக்கோள்,திட்டம்,கடந்த கால சேவைகளைப் பற்றி  சொல்லுங்கள். .
தேர்தலில் மட்டும் உங்களைப் பற்றியே பேச வேண்டிய கட்டாயம் .
அது தேவை .அது பெருமை அல்ல .

அடுத்தவனைப் பற்றியே பேசி தான் செய்ய வேண்டியதை செய்யாமல் போவதும் மார்கத்திற்கு விரோதமான ,பாவமான சொற்களை பயன்படுத்துவதால் தானும் கெட்டு மற்றவர்களையும் கெடுக்காதீர்கள்  .

உழைப்பு உயர்வாய் இருக்கட்டும்
வார்தைகள் உண்மையாய் மரியாதையாய் அறிவு புகட்டுவதாய் இருக்கட்டும்

பணம் கொடுத்து வாதாடும் வக்கீல்கள் போல் தான் விரும்பும் கட்சிக்காக வாதாடுகிறார்கள் அரசியல் சார்ந்த கட்சி சார்புடையோர் .
பேசுபவர்கள் பொய்யும் மெய்யும் கலக்க பேச பார்பவருக்கு சந்தேகம் வருகிறது தீர்ப்பும் வருகிறது பொய்யாக வாதாடும் வக்கீல்கள் கொள்கைக்கு மாற்றமாக

ஜவஹர்லால் நெஹ்ரு நம் நாட்டில் ஜனநாயகம் தொடர வழி வகுத்தார்
அதற்க்கு தேவையான அரசியலமைப்பு சட்டம் வர அம்பேத்காரின் உதவி உயர்வானது
மக்களாட்சியின் பெருமையை முழுமையாக அறிந்து அறிய பல சேவைகளும் சொற்பொழிவிகளும் ஆற்றும் வல்லமை பெற்றவராக அண்ணாதுரை வாழ்ந்தார் .
தீண்டாமையின் தீமையை விளக்கி மக்களுக்கு விடி விளக்காய் வாழ்ந்து வழி காட்டினார் பெரியார்.
அளவாக பேசினாலும் செயல் வீரராக திகழ்ந்தார் காமராசர்
மக்களின் நலனுக்கும், மனிதநேயத்திற்கும் முக்கியத்துவம் தந்து மற்றவரை மதித்தும் அதனால் மற்றவர்கள் அவரை மதிக்கும்படியாகவும் வாழ்ந்து காட்டினார் காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்கள்
 
நாம் இவர்கள் காலத்தில் வாழ்ந்து அடித்துக் கொள்ளும் இக்கால அரசியலை பார்க்க..... நேருவும்,அம்பேத்காரும் ,அண்ணாவும் ,பெரியாரும் தவறு செய்துவிட்டது போன்று காட்சியை சிலர் உருவாக்குகிறார்கள் .

மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி

மார்க்கத்தைப் பற்றி பேசுவான் மார்க்கம் சொன்னபடி நடக்க மாட்டான்
பேசுவது ஒன்று செய்வது ஒன்று
அறிக்கை தருவான் .அறிக்கையில் கண்டவைகள் நடக்காது
அறிக்கை மறைந்து போகும் .புது அறிக்கை தொடரும்
.
அடுத்தவரை வேதனை படுத்தி மகிழ்பவர்
அடுத்தவருக்கு கொடுக்கும் துன்பம் இவருக்கு மகிழ்வு

No comments: