என்ன இது நெஞ்சே
என்னை விட்டு விட்டு செல்ல துணிந்தாயோ!
எண்ணங்களை கொன்று கொன்று
எனை சேரத் தவித்தாயோ!
என்ன இது மாற்றம் நெஞ்சில்
உள் நெஞ்சை பிசைகிறதே
உள்ளம் அந்த வலியை தாங்க
உன்னை தினம் நினைக்கிறதே
தூண்டா விளக்கு என்னை
தூண்டிவிட வந்தவனே!
பாராமுகமாய் உன்னை
கண்களுக்கு மறைத்தது ஏன்?
இது காதலா அல்ல காமமா
இரண்டும் கடந்த புது உறவா
தேடலா இல்லை தேவையா?
இதை ஏற்றிட மனம் துணிந்திடுமா?
எனக்கே உயிர் கொடுக்க
என்னில் நின்று
இறந்து கொன்றாய்
தவியாய் என்னை தவிக்க வைத்து
வெட்ட வெளியாய் வழிந்துச் சென்றாய்.
கவிதை யாத்தவர் GJ Thamilselvi
No comments:
Post a Comment