by. ந. அப்துல் ரஹ்மான், ஹாங்காங்
மக்களவைத் தேர்தலில் பங்கேற்கும் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை தயாரித்து வருகின்றனர். மைய அரசின் வெளியுறவுக் கொள்கையில் மக்களின் கருத்தை அறியும் முயற்சி இதுவரை செய்யப்பட்டதாகத் தொ¢யவில்லை. ஊடகங்களும் இதில் பொ¢ய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தேர்தல் அறிக்கைகளில் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக எவையெல்லாம் குறிப்பிடப்பட வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலன் காக்க எந்த வகையான திட்டங்களை தீட்ட வேண்டும் என்பதை அரசியல் கட்சிகளின் பரிசிலீனைக்கு பின் வரும் பட்டியலை அளிக்க விரும்புகிறேன்.
இந்திய வெளியுறவுக் கொள்கை
1. ஈழத்தமிழர் நலனுக்கும், ஈழத்தமிழர் மறுவாழ்வுக்கும் இந்திய வெளியுறவுக் கொள்கையில் முதண்மையான பங்கு இருக்க வேண்டும்.
2. இலங்கை தமிழ் மாகாணங்களுடன் தொழில், வர்த்தக, கல்வி தொடர்புகளை தமிழக அரசு மேற்கொள்ள மைய அரசு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும்.
3. ஆக்கிரமிக்கப்பட்ட அரபு நாடுகளில் இருந்து அமொ¢க்கப் படைகளும், ஐரோப்பியப் படைகளும் உடனே வெளியேற்றப் பட மைய அரசு வலியுறுத்த வேண்டும்.
4. இந்தியா அண்டை நாடுகளுடன் உள்ள சிக்கல்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்.
5. இஸ்ரேலின் பாலஸ்தீனர்களுக்கு எதிரான போக்கை இந்தியா கண்டிக்க வேண்டும். உலக நாடுகளின் துணையுடன் தடுத்து நிறுத்த வேண்டும்.
6. ஐக்கிய நாடுகள் அவையில் உலக அமைதிக்காக போருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அணு ஆயுதப் பரவலைத் தடுக்க வேண்டும்.
7. ஆயுதப் போட்டியிலும், அணுகுண்டு உற்பத்தியிலும் இந்தியா ஈடுபடக்கூடாது.
8. இந்தியாவின் அடித்தட்டு மக்களைப் பாதிக்கும் எந்த வெளி நாட்டு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடக் கூடாது.
9. மக்களின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றும் வர்த்தக ஒப்பந்தங்களையும் ஏற்கக் கூடாது.
10. இந்திய வெளியுறவுக் கொள்கையில் வெளிப்படைத் தன்மைக்கு வழிகாண வேண்டும். தகவல் அறியும் சட்டத்தில் இதற்கு வழிகாண வேண்டும். ஊடகங்களும் வெளியுறவுக் கொள்கை தொடர்பான விழிப்புணர்வுக்கு வழிகாண வேண்டும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலன்
1. ஆதார் அடையாள அட்டையைப் போன்ற தரத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும்.
2. இரட்டைக் குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்கு நூல் வடிவிலான அடையாள அட்டைக்கு மாற்றாக இது போன்ற தனி அடையாள அட்டைகளை வழங்க வேண்டும். அவர்களுக்கு நிரந்தர எண் அட்டை தரப்பட வேண்டும். இதனால் அவர்கள் தங்கள் கடவுச்சீட்டை மாற்றும் போதெல்லாம் ஓசிஐ அட்டையையும் மாற்றத் தேவையில்லை.
3. இந்தியத் தூதரகங்கள் அந்தந்த நாடுகளில் வாழும் இந்தியப் பணியாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க உதவ வேண்டும்.
4. வெளி நாடு வாழ் இந்தியர்களில் தாயகத்தில் தொழில்,வணிகம் செய்யவும், முதலீடு செய்யவும் விரும்புவோரை ஊக்குவிக்க வேண்டும்.
5. வெளி நாடு வாழ் இந்தியர்களின் பிள்ளைகள் உயர்கல்வி பயில இந்திய கல்வி நிறுவங்களில் இட ஒதுக்கீடு அளிக்கலாம். அவர்கள் வாழும் நாடுகளிலேயே பயில கல்விக்கடன்கள் அளிக்கலாம்.
6. வெளி நாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் தங்கள் வாழும் நாட்டில் இருந்தே தூதரகங்கள் வாயிலாக வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும். இப்போது உள்ள திட்டத்தில் மிகச் சொற்பமானவர்களே அவ்வாறு வாக்களிக்கின்றனர். இத்திட்டத்தில் அனைவரும் இடம் பெற வேண்டும்.
7. அரசியல் கட்சிகள் தங்கள் பிரதிநிதிகளை வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களைச் சந்தித்து கலந்துறவாடவும், அவர்களின் கோ¡¢க்கைகளைக் கேட்டறியவும் செய்ய வேண்டும். மக்களவை உறுப்பினர்கள் தங்கள் பதவிக்காலத்தில் ஒரு முறையாவது ஏதேனும் ஒரு நாட்டுக்குச் சென்று அங்கு வாழும் இந்தியர்களைச் சந்தித்து உரையாட வேண்டும்.
8. நாடாளுமன்ற மாநிலங்களவையிலும், மாநில அரசுகளின் சட்ட மேலவையிலும் வெளி நாடு வாழ் இந்தியருக்கு தலா ஓர் இடமளிக்க வேண்டும்.
9. வெளி நாடுகளில் உள்ள இந்திய அமைப்புகளுடன் தூதரகங்களுக்கு உள்ள உறவை மேம்படுத்த வேண்டும். வெளி நாடுகளில் உள்ள இந்திய அமைப்புகள் மாநில அரசுடனும், மைய அரசுடனும் தேவையேற்படும் போது தொடர்பு கொள்ள வழிவகைகளை செய்யவேண்டும்.
10. வெளி நாடுகளில் வாழும் இந்தியர்களில் பணி முடிந்து திரும்புபவர்களுக்கும், தங்கள் பணி செய்த நாடுகளில் இருந்து வெளியேற்றப் படுபவர்களுக்கும் உ¡¢ய மறுவாழ்வு அளிக்க மைய அரசு உ¡¢ய திட்டங்களை வகுக்க வேண்டும்.
11. வெளி நாடுகளுக்கு வேலை வாய்ப்புக்கு செல்பவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும்.
12. வெளி நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்கும், கல்விக்கும் செல்பவர்கள் தங்கள் மருத்துவப் பா¢சோதனை உள்ளிட்ட அனைத்தையும் ஒரே இடத்தில் முடிக்க வழி காண வேண்டும். விண்ணப்பிக்கும் வழிகளை எளிமைப்படுத்த வேண்டும்.
13. இந்திய கலை, பண்பாட்டு விழாக்களை ஒவ்வோர் ஆண்டும் ஒரு நாட்டில் நடத்த வேண்டும்.
14. வெளி நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு இந்திய மொழிகளைக் கற்பிக்க மைய அரசும், மாநில அரசுகளும் ஊக்கத்தொகைகளை வழங்க வேண்டும். வெளி நாடுகளில் வளரும் இந்திய மாணவர்களுக்கு இந்திய மொழிகளைக் கற்பிக்க சான்றிதழ் படிப்பை சில பல்கலைக்கழகங்கள் துவங்கியுள்ளன. இதற்கான கட்டணத்தை மைய அரசும், மாநில அரசுகளும் வழங்க வேண்டும்.
15. கல்வி, கலை, அறிவியல், அரசியல், தொழில், வணிகம், பொதுப்பணி, மனித உரிமை, நாடுகளிடையே நல்லுறவு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கு ஆண்டு தோறும் மைய அரசு விருது வழங்க வேண்டும். ஏற்கனவே மைய அரசும், மாநில அரசும் வழங்கும் விருதுகளில் பொருத்தமான வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் இடமளிக்க வேண்டும்.
ந. அப்துல் ரஹ்மான், ஹாங்காங்
by Nazim Brothers
To Me
1 comment:
Income Tax for expats also. Duly paid by the recruiting co 75% and expats to be paid 25%.
Post a Comment