Saturday, March 1, 2014

”பருவம்” (பாடலுடன் கவிதை)



   முந்தியப்  பருவம் கருவறை வளர்ச்சி
    **** முதன்முதற் அங்குதான் சுழற்சி
    தந்தையும் தாயும் இறையவ னருளால்
    ****தளிர்நடை பயிற்றுதல் பருவம்
    பந்துபோ லுருண்டுத் திங்களும் ஆண்டும்
    ****பருவமாய் வளர்ந்திடும் நீண்டு
    வந்திடும் முதுமைத் தோற்றமும் பாயும்
    *******வளமையும் இளமையும் தேயும்!

    இளமையில் வேட்கைப் பருவமாய் அலைந்தாய்
    ****இல்லறம் கண்டதால் நிலைத்தாய்
    வளமையில் இறையை மறந்ததை யோசி
    ****வறுமையின் புயலதும் வீசி
    உளமதில் பருவ மாற்றமும் வந்து
    *****உறுதியும் குலைந்துநீ நொந்து
    களமதில் மாறும் காட்சியாய் உருவம்
    ******கரைந்ததும் காலமெனும் பருவம்!
 

    கருவறைப் பருவம் பெற்றதை மறந்தாய்
    ****கனவினில் மிதந்துநீ திரிந்தாய்
    ஒருமுறை எழும்பித் தீர்ப்பினைக் கண்டே
    ****ஒருயுகப் பருவமும் உண்டே
    பெருகிடும் துயரம்; பேறெனச் சுவனம்
    ******பெற்றிடத் தீர்ப்பிலே கவனம்
    பருவமாம் மறுமை நிரந்தரம் அன்றோ?
    .********படித்திடு வாழ்வினில் நன்றாய்!
    *
    அறுவடைப் பருவம் மட்டுமே ஆங்கு
    *********அதற்கென விதைத்திடு இங்கு
    மறுமுறை உலகின் பருவமும் தீண்டா
    *********மறுமையை நம்புவோர் வென்றார்
    நெறிமுறை பேணி வாழ்ந்திடும் பருவம்
    *******நிழலெனத் தொடரும் உருவம்
    பறிமுதல் செய்த உயிருடன் வாழ்க்கைப்
    .**********பருவமும் சென்றிடும் காற்றாய்!

 
 பாடலாசிரியர்: அதிரை கவியன்பன் கலாம்,(அபுதபி)
  
பாடியவர்: அதிரை பாடகர் :ஜஃபருல்லாஹ்(ஜித்தாஹ்)

இந்தப்பாடல் இலண்டன் வானொலியில் கவிதை நேரம் பாமுகம் ஒலிபரப்பில் இணைக்கப்பட்ட இணைப்பு

No comments: