Monday, March 31, 2014
வாசனைகள் அனுபவங்கள் உணர்வுகள்.
-நிஷா மன்சூர்
சில வாசனைகள் நம் ஆழ்மனதுக்குள் பதிந்து அந்தநேர அனுபவங்களுடன் ஐக்கியமாகி விடுகின்றன.
உதாரணமாக எனக்கு கிட்னி ஸ்டோன் வலி மிகைத்துத் துடித்த நாளில்
சாப்பிட்ட கொத்தவரங்காய் கூட்டு, அதற்குப்பிறகு வலியைத்தான்
நினைவூட்டுகிறது,இப்போதெல்லாம் கொத்தவரங்காயைப் பார்த்தாலே அடிவயிற்றில் வலிப்பதுபோன்ற ஒரு உணர்வு.
அதேபோல
குளிக்கும்போது காதுக்குள்ளே நீர் புகுந்துவிட்டால்
சின்ன வயதில் கிணற்று நீச்சல் பழகும்போது ஏற்பட்ட உணர்வுகள்
மீண்டும் தோன்றி மறையும்.
வாழ்க்கைத்துணைவி முடிவாகி உறுதிப்படுத்தப்பட்டபோது
தூத்துக்குக்குடியிலிருந்து திருநெல்வேலிக்குள் நுழைந்துகொண்டிருந்தேன். அப்போது காற்றில் மிதந்த மல்லிகை வாசனையோடு அந்த தகவல் மனதில் பதிவாகி உள்ளது,
இப்போது மல்லிகை மணக்கும்போது அந்த நினைவும் மலர்வதைத்
தவிர்க்க முடியவில்லை.
ஒன்பதாம் வகுப்பு படிக்கையில் அம்மா இறந்தபோது சமாதானப்படுத்திய மாமா அழைத்துப்போய் வாங்கித்தந்த தேங்காய்பன்னும் கடலைமிட்டாயும் கலந்து எழுப்பிய வாசனை, இப்போது பரவும்போதும் அம்மா மறைந்த சோகத்தைச் சுமந்துகொண்டே பரவுகிறது.
முதன்முதலில் மதினமா நகரத்திற்குள் நுழைந்து உயிருக்கும்மேலான
கண்மணி நாயகம் ரசூல் (ஸல்) அவர்களின் பள்ளிக்குள் உணர்ச்சிப்பிழம்பாக நுழையும்போது நாசிக்குள் நுழைந்து இதயத்துக்குள்ளும் உணர்வுகளுக்குள்ளும் ஊடுருவிப் பரவிய ஒரு
அத்தரின் நறுமணத்தை இப்போது நுகரும்போதும் உணர்வுகள் கொந்தளித்து கண்கள் தளும்பாமல் இருந்ததில்லை.
இன்னும் பல வாசனைகள்,
ரத்தக்கவுச்சி
வியர்வை மணம்
புழுதி வாசனை
மண்வாசனை
புத்தக வாசனை
புழுங்கிய வாசனை
பச்சைச் சிசுவின் வாசனை
அத்தாவை குளிப்பாட்டும்போது எழுந்த வாசனை
இன்னும் இன்னும் இன்னும்
வாசனைகளுக்குள் மறைந்திருக்கும் உணர்வுகளும்
அனுபவங்களுக்குள் பதிந்திருக்கும் வாசனைகளும்
வாழ்வின் பயணத்தினூடே
அழுத்தமாகப் பதிந்திருக்கின்றன...!!
-நிஷா மன்சூர்
வாழ்த்துகள் to நிஷா மன்சூர்
Nisha Mansur . M.A., (Socialogy)
Annamalai University, Chidambaram
Hometown
Mettupalayam
வாழ்த்துகள் to நிஷா மன்சூர்
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
"Allah will reward you [with] goodness."
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment