Tuesday, January 21, 2020

நவீன உலகமும் பின்பற்றும் சத்திர சிகிச்சையின் தந்தை AL-ZAHRAWI

 by ziyadaia

REVIEW ARTICLE OF ZAHRAVIஅல் ஜஹ்ராவி (A.D.936-1013)
THE FATHER OF MODERN SURGERY

நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://abedheen.blogspot.com/2013/07/albucasis.html )

Edited by :- Dr Ziyad A.I.A

அபுல் காஸிம் கலஃப் பின் அப்பாஸ் அல் ஜஹ்ராவி என்ற முழு பெயரையுடைய இவரை  Abulcasis  என்று லத்தின் மொழியில் மேற்கத்திய உலகத்தில் அறியப்படுகிறது. அந்துலுசியா என்றழைக்கப்படும் இன்றைய ஸ்பெயினில் அன்றைய இஸ்லாமிய தலைநகராக இருந்த கொர்தோபாவிலிருந்து வடமேற்கே 6 மைல் தூரத்து புறநகர் பகுதியான அல் ஜஹ்ரா என்ற இடத்தில் கிபி 936 க்கும் 940 க்கும் இடையே பிறந்தார்.  பிறந்தது, வளர்ந்தது, கல்வி, தொழில்,  என எல்லாமே கொர்தோபாவில்தான். தொழில் நிமித்தமாகவோ அல்லது கல்விக்காகவோ அல்லது வேறு காரணத்துக்காகவோ வேறு எங்கும் செல்லவில்லை.



தன் வாநாள் முழுவதும் மருத்துவத்திற்காக  செலவிட்ட உத்தமர் மறைந்ததும் கொர்தோபாவில்தான்.


கி.பி எட்டாம் நூற்றாண்டில் அந்துலூசியா இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்ததும் உமையா கலிஃபா முதலாம் அப்துற் ரஹ்மான்கொர்தோபாவை 755ல் நிர்மாணித்தார். அது பத்தாம் நூற்றாண்டில்  மிகச் சிறந்த தலைநகரமாக விளங்கியது.

அன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான அறிஞர்கள் பல்வேறு துறைகளில் (polymath) சிறந்து விளங்கினர். ஆனால் அல் ஜஹ்ராவி மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு நிற்கிறார். தான் எடுத்துக்கொண்ட துறையில் மட்டுமே கவனம்

செலுத்தியதால் என்னவோ அதில் மாபெரும் நிபுணத்துவம் பெற்றார். இளம் வயதிலேயே மன்னர் இரண்டாம் அல் ஹாகமின் பிரத்தியேக  அரசவை மருத்துவராக மட்டுமில்லாது பொது மருத்துவமனையில் மருத்துவராகவும் மருத்துவப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். இவர் பெரும்பாலும் விபத்து மற்றும் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்ததின் மூலம் அறுவை சிகிச்சையில் தனி முத்திரை பதித்தார்.





ஐம்பதாண்டுகால மருத்துவ சேவையில் மருத்துவராக, அறுவை சிகிச்சை நிபுணராக, எலும்பு சிகிச்சை நிபுணராக, கண்மருத்துவ நிபுணராக, மருத்துவப் பேராசிரியராக, ஊட்டஉணவு நிபுணராக பரிணமித்தார்.  உலகிற்கு வரப்பிரசாதமாக அளித்தது அவர் எழுதிய ‘அத் தஸ்ரிஃப் லிமன் அஜிஜா அன் அத் தஃலிஃப்’ (The Method of Medicine) என்ற நூல்.  மருத்துவ உலகின் பேரகராதி என்று பின்னால் வந்த மேற்கத்திய அறிஞர்களால் சொல்லப்படுகிறது.



முதன்முதலில் மார்பக புற்று நோய்க்கு சிறப்பு அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தினார். lithotrities for bladder stones, புதிய உக்தியைக் கையாண்டு thyroid cysts ஐ நீக்கினார். அக்காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரியில் முன்னோடியாக இருந்து பல அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார்.

இவர் தலைசிறந்த பல்மருத்துவராகவும் விளங்கியுள்ளார். பல் மருத்துவத்துக்காகப் பயன் படுத்த பல்வேறு வகையான ஆயுதங்களை இவரே வடிவமைத்து உருவாக்கினார். ஒழுங்கற்ற பல்வரிசைகளை எப்படி சீர்படுத்துவது என்பதை அல் தஸ்ரிஃபில் குறிப்பிட்டுள்ளார். தவிர செயற்கைப் பற்கள் தாயாரிக்கும் முறையையும் அவற்றை பதிக்கும் முறையையும் விளக்கியுள்ளார். வழக்கத்துக்கு மாறான நோயையும்(unusual disease), பரம்பரை இரத்த ஒழுக்கு நோயையும்  குணப்படுத்த  எத்தகைய மருந்து கொடுக்கவேண்டும் என்று முதன்முதலில் விளக்கியதும் இவரே (the first to describe clearly the hereditary circumstances surrounding haemophilia.  He also described ligaturing of blood vessels long before Ambroise Pare). மாறிய கருத்தரிப்பு (ectopic pregnancy) க்கு சிகிச்சை அளித்த முதல் மருத்துவரும் இவரே.



ஏறக்குறைய 200 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைக்கான கருவிகளை வடிவமைத்தார் (From a tongue depressor and tooth extractor to catheter and an elaborate obstetric device). இவற்றில் 90% ஆனவை அதே வடிவிலோ சில Modification உடனோ தட்காலத்திலும் பாவிக்கப்படுகின்றன. (Evidence:-Al-Thasrif Images)தஸ்ரிஃபில் இவர் விளக்கியுள்ள பல்வேறு வகையான அறுவை சிகிச்சை முறைகள் பிரமிப்பூட்டுவனவாக இருக்கிறது என்கின்றனர்.

Cauterization முறை மூலம் Viral Warts நீக்குதல், இரத்த ஓட்டத்தை நிறுத்துதல் முறையை செய்து காட்டி தனது நூலிலும் விளக்கினார். இதுவே தட்காலத்திலும் உபயோகிக்க படுகிறது. Diathermy Cauterization முறையே தட்காலத்தில் சத்திர சிகிச்சைகளில் இரத்த இழப்பை தடுக்க பயன்படுத்தபடுகிறது. இது சிசேரியன் முதல் சகல சத்திர சிகிச்சைகளிலும் பாவிக்கபடுகிறது.

சில வகையான தலைவலிக்கு தலையில் உள்ள Temporal Artery வெட்டுதல் தீர்வை தரும் என்பதை விளங்கியதோடு தனது நூலிலும் குறிப்பிட்டுள்ளார்.இதுவே தட்காலத்தில் trigeminal neuralgia என்று அழைக்கப்படுவதோடு அதே சத்திர சிகிச்சையே தற்போதும் தீர்வாக உள்ளது.

“In his treaties Al Zahrawi discussed cauterization, bloodletting, midwifery and obstetrics and the treatment of wounds. He described the exposure and division of the temporal artery to relieve certain types of headaches,  diversion of urine into the rectum, reduction mammoplasty for excessively large breasts and the extraction  of cataracts.”

மேலும் எலும்பு முறிவு, மூட்டுகளின் பிரச்சினை, மூக்கு எலும்பு, முள்ளெலும்பு (vertebrae)  முறிவுகள் பற்றி விரிவாக எழுதியுள்ளார். In fact ‘Kocher’s method‘  for reducing a dislocated shoulder was described in Al Thasrif long before Emil Theodor Kocher  was born.



அல் ஜஹ்ராவி கண்டுபிடித்த கருவிகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது மூன்று வகை கருவிகள்.

காதின் உட்பகுதியை சோதிக்கும் கருவி,
சிறுநீர் குழாயின்(urethra) உட்பகுதியை சோதிக்கும் கருவி,
தொண்டையிலிருக்கும் தேவையற்ற பொருளை (foreign bodies) நீக்க அல்லது வெளிக்கொணர பயன்படுத்தும் கருவி.
AL-ZAHRAVI ஆல் விளக்கப்பட்ட சில சத்திர சிகிச்சை உபகரணங்கள்.






அல் தஸ்ரிஃப் (THE METHOD OF MEDICINE):-
முப்பது பிரிவுகள் (volumes) கொண்ட இந்நூல் பல்வேறு மருத்துவ செய்திகளை விளக்குகிறது. முதல் மூன்று பிரிவு (babs) களில் 190 அத்தியாயங்களை (fasls) உள்ளடக்கி மருத்துவத்துறைக்குத் தேவையான எல்லா செய்திகளையும் சொல்கிறது. சுடுவைத்திய(cautery) முறையும் அதன் உபகரணங்கள்,

இரத்தம் வெளியேற்றுதல்,cupping, காயமடைந்த உடலிலிருந்து அம்புகளை வெளியேற்றுதல் , மற்றும் காயங்கள் தையல்களுக்கான பல்வேறு வகையான ஊசிகள் மற்றும் நூல்கள்; எளிய மற்றும் கூட்டு முறிவுகள் குணப்படுத்தும் முறைகளை அறிமுகப்படுத்தினார்.

இது சுமார் 150 வகையான சத்திர சிகிச்சை உபகரணங்களின் வரைபடங்கள், droppers and syringes, மருத்துவ-மருந்து தொழில்நுட்பத்தின் விளக்கங்கள்,சிறுநீரக கற்களை சத்திர சிகிச்சை மூலம் வெளியேற்றும் விரிவான விளக்கங்கள் , பல் சுகாதாரம் , பல் பிடுங்குதல் , போலி பற்கள் பொருத்துதல் பற்றி ( interdiction of amputations above knee, and the elbow due to a dangerous situation) கூறப்பட்டுள்ளது. இறந்த சிசுக்களை cranioclastic delivery முறை மூலம் வெளியேற்றுவது பற்றி குறிப்பிட்டுள்ளார்.

Volume 1 & 2:  தன்னுடைய நாற்பது ஐம்பது வருட அனுபவங்களைக் குறிப்பிடுகிறார். தான் சந்தித்த நோயாளிகள், நோய்களின் தன்மை, நோயாளியின் மனோஇயல், நோயாளியுடனான உறவு முறை, உடற்கூறுவியல், கூற்றியல், anatomy, physiology, constitution of body and condition; classification of drugs and diseases and clinical medicine முதலானவற்றை  குறிப்பிடுகிறார்.

Volume 3 to 9:  பல்வேறு வகையான மருந்துக்கள், விஷ மருந்துக்கள்;  புளித்து நுறைத்துப்போன பழைய காடி; புளிப்பு, இனிப்பு வகை மாத்திரைகள், மலச் சிக்கலை போக்கும் மருந்துகள்; எதிரிகளால் கொடுக்கப்பட்ட விஷங்கள்; pessaries மற்றும் suppositories மற்றும் அவர்களின் மருந்தியல் பண்புகள் பற்றி விளக்கி உள்ளார்.

Volume 10 to 18:  பாலுணர்வு மற்றும் பிறப்புறுப்புகள்; கொழுப்பு மற்றும் உடல் பருமன்,வினாகிரி சேர்த்த , சேர்க்கப்படாத மருத்துவ பாணிகள் , வாய் துர்நாற்றத்தை போக்கும் inhalers , காயங்களை குணமாக்கும் Powder கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

Volume 19 to 25:  Cosmetics and richly spiced perfumery, toiletries, hair dressing and delicacy and charmer adornments; eye salves. collyria and compresses; unguentum. unctions, embrocations, balms and liniments; dentifrices; prophylactic and preventive medical remedies and mouth gum drugs. பல்வேறுபட்ட உடல் கட்டிகள் , வீக்கங்கள் அவற்றுக்கான மருத்துவம், expectorants and dressings.

Volume 26 & 27: Therapy, and the properties of diets and drugs, and their reparation; restoration. amelioration and cooking procedures; identifying of cereals, breads, wines, waters, soft drinks, legumes, meats, fishes, and wools; and the suitability of clothing and outfitting of raiments and colors.

Volume 28 & 29: மருந்துகள் காலாவதி ஆதல், மருந்துகளுக்கு பெயரிடுதல்,

Aging of drugs; medico-pharmaceutical nomenclature, and technology and weight and measures.

Volume 30:  தனது புத்தகத்தின் 11ம் அத்தியாயத்தில் சத்திர சிகிச்சை சம்பந்தமான பல கொள்கைகளை முன்வைத்துள்ளார். சத்திர சிகிச்சைக்கு முன் மையை பாவித்து வெட்டும் இடத்தை அடையாளப்படுத்தும் முறையை அறிமுக படுத்தினார். அது தட்காலத்திலும் standard procedure ஆக கொள்ளப்படுகிறது. 26ம் அத்தியாயத்தில் காயங்களின் உடனடி தையல் , பிட்பத்திய தையல் பற்றிய வித்தியாசத்தை விளக்கியதோடு (differences between primary and secondary wound closure) காயத்துக்கு மருந்து கட்டுமுன் அதனை சுத்த படுத்துவதன் முக்கியத்துவத்தையும் விளக்கியுள்ளார்.

In (chapter 47 ) Gynecomastia எனும் ஆண்களுக்கு ஏட்படும் மார்பக வீக்கத்தை C – வடிவ வெட்டின் மூலம் சுரப்பி கலங்களை அகற்றும் முறையை விளக்கினார். (இதுவே தட்காலத்திலும் Gold Standard ஆக உள்ளது.)



இறுதிக் காலம்:-

அறுவை சிகிச்சையின் தந்தையாக விளங்கிய இவர் மரணிப்பதற்கு இரண்டாண்டுகள் முன்பு காஸ்டிலிய – அந்துலுசிய சண்டையில் அல் ஜஹ்ரா நகரம் பெரும் பாதிப்புக்குள்ளானது. அந்நிகழ்வுக்குப் பின் கி.பி 1013 ல் தனது 77ம் வயதில் இறையடி சேர்ந்தார். இவரது பணி, ஆற்றல், செல்வாக்கு, புகழ் வெளி உலகிற்கு தெரியாமலிருந்தது. மூரிஷ் ஸ்பெயினிலுள்ள முக்கிய மருத்துவர்களைப் பற்றி அபு முஹம்மது பின் ஹாஜம் (993-1064) எழுதும்போது அல் ஜஹ்ராவியையும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அல் ஜஹ்ராவியின் வாழ்க்கை வரலாற்றை அவர் இறந்து அறுபதாண்டுகளுக்குப் பின் அல் ஹுமைதி எழுதிய ‘ஜத் அத் அல் முக்தபிஸ் (On Andalusian Savants) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அல் ஜஹ்ராவியின் சம காலத்தில் வாழ்ந்த அந்துலுசிய வேதியியலார் இபுனு அல் வாஃபித், மஸ்லமாஹ், அல் மிஜ்ரிதி, Artepuius ஆவர்.

பிற அறிஞர்கள் பார்வையில்…

Al Zahrawi was described by Pietro Argallata (died 1423) as “without doubt the chief of all surgeons”. Jacques Delechamps (1513-1588), another French surgeon, made extensive use of At-Tasrif in his elaborate commentary, confirming the great prestige of Al Zahrawi throughout the Middle Ages and up to the Renaissance.

At-Tasrif was translated into Latin by Gerard of Cremona in the 12th century and alongside Avicenna’s Canon, played a major role as a medical text in the universities of Europe from the 12th to the 17th century AD. Two of El Zahrawi’s treatises deserve special mention. Firstly his 28th treatise, known in Latin as Libber servitors de preparation Medici arum simplified, describes chemical preparations, tablet making, filtering of extracts and related pharmaceutical techniques. This treatise was printed in Venice in 1471 by Nicolaus Jensen. இத்துடன் நின்றுவிடவில்லை, 1497 மற்றும் 99 லும் அச்சிடப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டில் 20 க்கு மேற்பட்ட முறை மீண்டும் அச்சிடப்பட்டது.



மேலும் பல சாதனைகள் – ஒரு சிறு கண்ணோட்டம்:-

பல் மருத்துவத்தில் தலை சிறந்த நிபுணராக இருந்தார். அவரது நூலில் பல்வேறு பல் மருத்துவத்துவத்திற்கு பயன்படுத்தக்கூடிய பல்வேறு கருவிகளை ஓவியமாக வரைந்ததுடன் பல்வேறு பல் அறுவை சிகிச்சைகளையும் விளக்கியுள்ளார்.
சிதைந்துபோன அல்லது வரிசையற்ற பல் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முறையை விவாதித்துள்ளார்.
சிதிலம் அடைந்த பற்களுக்குப் பதிலாக செயற்கை பற்கள் பொருத்தும் முறையை மேம்படுத்தியுள்ளார்.
முதன்முறையாக பாரம்பரிய இரத்து ஒழுக்கு நோயையும் வழக்கத்துக்கு மாறான நோயையும் விவரித்துள்ளார்.
அறிஞர் அம்ப்ரோஸ் பேர்(Ambroise Pare) க்கு முன்பே இரத்த குழாய்களை தைத்தல்  பற்றி விவரித்துள்ளார்.
அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கருவிகளின் விளக்கப்படங்களுடன் வழங்கிய முதல் மருத்துவர் அல் ஜஹ்ராவி ஆவார்.
அறுவை சிகிச்சையில் எரிகாரத்தின் (caustics) பயன்பாட்டை ஓரளவு விளக்கிவிட்டு உள் நாக்கு அறுவை (tonsillectomy), மூச்சுகுழல் துளை அறுவை (tracheotomy), மண்டைத் திறப்பு (craniotomy) அறுவைகளை விரிவாக விளக்கியதோடு இறந்த சிசுவை (dead foetus) அறுவை மூலம் நீக்கியுள்ளார்.
மூக்கின் விழுதை (polyp) நீக்க கொக்கி(hook)யை எப்படி உபயோகிக்கவேண்டும்;  இவர் கண்டுபிடித்த பல்ப் சிரஞ்சியைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு எனிமா எப்படி கொடுக்கவேண்டும்;
சிறுநீர்ப்பை கல்லை எடுக்க மெட்டாலிக் ப்ளாடர் சிரஞ்சியை Metallic Bladder Syringe) எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதை இவரே விளக்குகிறார்.
சூடுகோல் கொண்டு தீய்த்து (cauterization) வியாதியை குணப்படுத்துவதில் நிபுணராக இருந்தார், இந்த கலையைப் பயன்படுத்தி 50 க்கு மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார்.


‘என் குழந்தைகளே..!’ என்று தன் மாணவர்களை எப்போதும் அன்புடன் அழைத்த பண்பாளர் அல் ஜஹ்ராவி மறைந்து ஆயிரம் ஆண்டுகள் கடந்து போனாலும் அவர் வடிவமைத்த கருவிகள் இன்றும் புகழ் பாடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நமக்குத்தான் அதன் மொழி புரியவில்லை….



அல் ஜஹ்ராவி கண்டுபிடித்த கருவிகள் சில :


SOURCES:
கீழே உள்ள 3 pdf Review Article களும் நவீன மார்பக சத்திர சிகிச்சை , என்பு சத்திர சிகிச்சை மற்றும் ஏனைய சத்திர சிகிச்சைகளில் Al-Zahravi இன் பங்களிப்பை புடம்போட்டு காட்டுகின்றன.
இங்கு பார்க்க 

















https://en.wikipedia.org/wiki/Al-Zahrawi

http://journals.iium.edu.my/revival/index.php/revival/article/view/99/101

https://www.researchgate.net/publication/236262277_Remanufacturing_and_Evaluation_of_Al_Zahrawi’s_Surgical_instruments_Al_Mokhdea_as_Scalpel_Handle

http://www.ijirr.com/sites/default/files/issues-files/0104.pdf

https://www.iosminaret.org/vol-8/issue14-15/Al-Zahrawi_in_Europe.pdf

http://www.academia.edu/15272451/Surgery_for_Gynecomastia_in_the_Islamic_Golden_Age_Al-Tasrif_of_Al-Zahrawi_936_1013_AD_

http://www.islamicity.com/Science/scientists/Al-Zahrawi.shtml
http://www.facebook.com/pages/Abu-Al-Qasim-Al-Zahrawi-Father-of-Modern-Surgery/279150523567
http://www.ismaili.net/mirrors/57_sina/zahrawi.htm
http://www.iosworld.org/download/Al-Zahrawi.pdf
http://www.esinislam.com/Muslim_Biography/Selected_Muslims_In_Civilization/Selected_Muslims_In_Civilization_Al-Zahrawi.htm#AllahIsGreat
http://www.aps.eg.net/back_issue/vol2/issue2_april2006/pdf/1-Al%20Zahrawi.pdf
http://www.factofarabs.net/ERA.aspx?id=99
ABOUT THE AUTHOR
ziyadaia
ziyadaia
Dr. A.I.A.ZIYAD, MBBS (Peradeniya), MSc - Biomedical Informatics (Colombo), Registrar in MD Health Informatics, Management Development & Planning Unit | Health Information Unit | Ministry of Health,
ABOUT THE AUTHOR
ziyadaia

Dr. A.I.A.ZIYAD, MBBS (Peradeniya), MSc - Biomedical Informatics (Colombo), Registrar in MD Health Informatics, Management Development & Planning Unit | Health Information Unit | Ministry of Health,

No comments: