Thursday, January 23, 2020

டாக்டர் ரெய்ஹான்


புனித மக்கா மாநகரில், பிரபல
ஏசியன் பாலிகிளினிக்கில் நான்
குழந்தைகள் நல மருத்துவராக
பணி புரிந்த நேரம்....பணியில்
சேர்ந்த நேரம், ஹஜ் நேரம்
என்பதால் ஹஜ் செய்ய
விரும்பினேன்.

எனது இந்திய நண்பர்கள்
டாக்டர் ரெய்ஹான் மற்றும்
டாக்டர் ஷேக் உமர் இருவரும்
எனக்கு உதவ முன் வந்தனர்.
ஹஜ் எப்படி செய்வது என்பது
பற்றி எனக்கு மிகவும் புரியும்
விதத்தில் மிகவும் எளிதாக
விளக்கம் தந்தனர்.மார்க்க
விசயங்களில், என்னை விட
இருவரும் மிகவும் ஞானமிக்கவர்
களாக இருந்தது எனக்கு மிகவும்
ஆச்சரியமாக இருந்தது.



டாக்டர் ரெய்ஹான், குர்ஆனை
மனனம் செய்த ஒரு ஹாபிசாக
வும் திகழ்ந்தார்.அவ்வப்போது
குர்ஆன் விளக்க உரைகளும்
நிகழ்த்துவார்.

டாக்டர் ரெய்ஹான்
கர்நாடகா மாநிலத்தை
சார்ந்தவர்.உருது நன்றாக
பேசுவார்.எனக்கு உருது பேச
வராது என்பதால் ஆங்கிலத்தில்
என்னிடம் பேசுவது அவருக்கு
பிடிக்கும்.நிறைய விசயங்களை
பேசுவார்.

ஒரு நாள்....ரெய்ஹான்
தன் கதையை என்னிடம் சொல்ல
துவங்கினார்.”டாக்டர்.ஹபீப்...
டூ யூ நோ ஐ ஆம் புரம் எ பிராமின்
பேமிலி.”எனது தந்தை ஒரு சாஸ்திரி.
மருத்துவ கல்லூரியில் படிக்கும்
போது இஸ்லாம் என்னை மிகவும்
ஈர்த்தது.குர்ஆனை பலமுறை
வாசித்தேன்.என் தந்தையிடமும்
கொடுத்து படிக்க சொன்னேன்.
என் நோக்கம் அவருக்கு புரிந்தது.
அவர் சொன்னார்....இந்த
வேதத்தில் பல நல்ல கருத்துக்கள்
உள்ளன.இஸ்லாம் மதம் உனக்கு
பிடித்தால் தாராளமாக உன்னை
இணைத்துக் கொள்...நான் தடை
சொல்ல மாட்டேன்....

டாக்டர் ராமன், சிறிய பெயர்
மாற்றத்துடன் டாக்டர் ரெய்ஹான்
ஆக மாறிய கதையை அவர்
சொல்ல சொல்ல.....நான்
வியப்பில் ஆழ்ந்தேன்.

ஒரு உண்மையை இங்கே
சொல்லியே ஆக வேண்டும்.
என்னால் கூட ரெய்ஹான்
அளவுக்கு இஸ்லாமிய நெறி
முறைகளை வாழ்வில் கடை
பிடிக்க இயலவில்லை.
நேரம் தவறி தொழுதால்
திட்டுவார்..சில நேரம் நீ
ஒரு நல்ல முஸ்லிம் இல்லை
என்று கூட சாடுவார்...

அதுபோலவே கேரளாவைச்
சார்ந்த, டாக்டர் ஸ்ரீ குமார்
தான்... ஒரு சிறிய பெயர்
மாற்றத்துடன், டாக்டர் ஷேக்
உமராக மாறினார் என்பதை
அறியும்போது.....இஸ்லாம்
எப்படி அவரை கவர்ந்தது
என்பதை விளக்கிய போது....!

டாக்டர் ரெய்ஹான் என்னிடம்
சொன்னது இன்றும் என் காது
களில் ஒலிக்கிறது.
“மே பீ...வீ ஆர் நியூ கன்வெர்ட்ஸ்
டு இஸ்லாம்....பட் அவர் ஈமான்
இஸ் வெரி ஸ்ட்ராங்க்...”
உள்ளபடியே டாக்டர் ரெய்ஹான்
போல் என்னால் இருக்க முடிய
வில்லை என்பது தான் உண்மை.

Vavar F Habibullah

No comments: