Thursday, January 23, 2020

பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு!


பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு
பத்து மாதம் சுமந்து

எத்தனையோ வலிகள்

அத்தனையும் தாங்கி

பெற்றெடுத்தாள்

பிள்ளைக் கனியமுதை

பாலூட்டி தாலாட்டி

அன்னை அவள்

அந்த பிள்ளையை வளர்த்தாள்




தந்தை இல்லா பிள்ளை அவனுக்கு

தாயே தந்தையும் ஆனாள்

அவள் அரவணைப்பில் இனிதே

வளர்ந்தான் பிள்ளை

நல்ல பள்ளிகளில் படிதான்

உயர் கல்வி அத்தனையும் படிக்க

தாய் அவள், துணை செய்தாள்;

படிப்பு முடிந்து சிறந்த அலுவலகத்தில்

உயர்ந்த வேலையில் அமர்ந்தான்

அவன் வாழ்க்கை பயணம் துடங்கிற்று


தாய் தாய் மாமன் மற்றும் உறவினர்

ஆலோசித்து அவனுக்கு நல்ல

திருமணமும் செய்து முடித்தனர்


வாழ்க்கையின் இரண்டாம் பயணம்

பிள்ளைகள் பெற்றான் சம்சாரி ஆனான்

தாயுடன் தான் இருந்தான்

இப்போதெல்லாம் அவன் இருப்பதெல்லாம்

மனைவியின் முந்தானை முடிப்பில்


மெதுவாக மெதுவாக பெற்றவளை

புறக்கணிக்க அவன் தொடங்க

உச்சக்கட்டத்தில் ஒரு நாள்

தன உயிரினும் மேலாய் வளர்த்த

அன்னையை வசதிகள் எல்லாம் இருந்தும்

வீட்டை விட்டு எங்கோ ஓர்

முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு

ஏதோ பெரும் பாரம் குறைந்தார் போல்

இல்லம் திரும்பினான்

பிள்ளைகள் பாட்டி எங்கே என்று கேட்டதற்கு

பாட்டிக்கு நம்ம வீடு பிடிக்கலை

அதனால் முதியோர் இல்லத்தில்

விட்டு விட்டு வந்தேன் என்றான்

பிள்ளைகளோ அப்பா பாட்டி நல்லவங்க

நம்ம வீடு, எங்களையும் ரொம்ப பிடிக்கும்

அவங்களுக்கு; அம்மாவின் பேச்சைக் கேட்டு

நீ தான் அவங்களை அங்கு விட்டு விட்டாய்

என்று சொல்ல அப்போதும் அவன் மனசு

சிறிதேனும் மாறவில்லை


பெத்த மனம் பித்தாய் அங்கு

முதியோர் இல்லத்தில் அலைந்திட

பிள்ளை மனம் கல்லாய் இங்கு

தன்னை உருவாக்கி வளர்த்தவளை

ஒதுக்கி மறக்க முயல்வதேனோ

இதை ஊழ் வினை என்று

சொல்லி உலகம் மறக்கும்

ஆனால் மேலே 'அவன்' இதை

பார்த்துக்கொண்டு இருக்கின்றான்

அவன் இவனை என்ன செய்வான்

யார் அறிவார் , அப்போதும் ஒன்று நிச்சயம்

இவனை தண்டிக்காதே என்று தான்

இறைவனை பெற்றவள் அவள்

வேண்டி நிற்பாள் -

பெத்த மனம் பித்து

பிள்ளை மனம் கல்லு
https://eluthu.com/kavithai/303044.html

No comments: