Saturday, January 4, 2020

வந்தேறிகள்

Vavar F Habibullah

உலக சரித்திரத்தின் பக்கங்களே
வந்தேறிகளால் தான் நிரம்பி வழிகிறது.
அகன்ற நில பரப்பை
கட்டி ஆழ்வதே அன்றைய மகா
வீரர்களின் லட்சியமாக இருந்தது.

கிரேக்கம்,ரோமானியம்
பாரசீகம்,அரபகம்,எகிப்து
துருக்கி அல்லது இந்தியா
தான் வந்தேறிகள் வாழும்
நிலமாக உருவெடுத்தது.
கடல் புற தேசமாக அமைந்த
இயற்கையின் வெகுமதி
காரணமாகவே சிறு நாடுகளான
போர்த்துகல்லும்,ஸ்பெயினும்,
பிரஞ்சும்,டச்சும்,இங்கிலாந்தும்
உலக பெரும் நாடுகளை தங்கள்
வலைகளில் எளிதாக விழ வைத்தன.


கி.மு.ஆறாம் நூற்றாண்டுகளில்
மக்காவில் இஸ்லாம் தோன்றிய
போது, அமெரிக்கா,இங்கிலாந்து
ஐரோப்பா,சீனா,ரஷியா,ஜப்பான்
போன்ற இன்றைய வல்லரசு
நாடுகள் எதுவும் அன்றைய
உலக வரை படத்தில் இல்லை.

இறைவன் பெரியவன் என்று
முஸ்லிம்கள் எழுப்பிய முதல்
மந்திரச் சொல்லே மக்காவில்
இருந்த சிறுபான்மை முஸ்லிம்களை
மதினா நகரம் நோக்கி ஓட வைத்தது.
முகமது நபியை ஆட்சி கட்டிலில்
அமர்த்தி அழகு பார்த்தது.அந்த
சொல் விளைவித்த சக்தியில்
அன்றைய பெயர் பெற்ற ராஜ்யங்களான கிரேக்கம்,ரோமாபுரி,பாரசீகம்,எகிப்து,
வளைகுடா நாடுகள், துருக்கி,
ஸ்பெயின்,ஆப்பரிக்க நாடுகள்
என உலகம் அறிந்த நாடுகள் எல்லாம்..
ஒன்றன் பின் ஒன்றாக விரைந்து
முஸ்லிம்கள் வசமாயின.
மொகஞ்சதாரோ,ஹாரப்பா
நாகரீகங்கள் எல்லாம் இஸ்லாமிய
நாகரீகத்தில் மங்கி போயின.
யூத,கிருத்துவ மத இயக்கங்கள்
வேறூன்றி இருந்த ஜெருசலேம்
கூட முஸ்லிம்கள் வசமானதும்
முஸ்லிம் நாடுகளாக வலு
பெற்றதும் உலக அதிசயமே!

இந்திய திருநாட்டில்
கால் பதித்த ஆரியரும்,
திராவிடரும் சிந்து
சமவெளியின் சொந்தங்கள்
என்றாலும் தொடர்ந்து வந்து
குடியேறிய கோரி,கில்ஜி,
துக்ளக்,லோடி,மொகல் மன்னர்கள்
எல்லாம் இஸ்லாமிய கலீஃபாக்களின்
நேரடி வாரிசுகள் அல்ல என்பதே
சரித்திரம் சொல்லும் உண்மை.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல்
ஆட்சியில் இருந்த போதும்
தாங்கள் ஆட்சி செய்யும் இந்திய
நாட்டின் இந்து பெருமக்களை
மதமாற்றம் செய்யும் பணியில்
இந்த ஆட்சியாளர்கள்
நடக்கவில்லை என்பதும்,
மத நல்லிணக்கம்
போற்றி பாதுகாக்கப் பட்டதும்,
தாங்கள் ஆளும் இந்தியாவை
ஒரு முஸ்லிம் நாடாக அவர்கள்
பிரகடனம் செய்யவில்லை
என்பதும் வரலாறு நமக்கு
சொல்லும் பாடம் ஆகும்.முஸ்லிம்
ஆட்சியில் பக்தி மார்க்கம்,
இந்து முஸ்லிம் மத ஒற்றுமைக்கு
வழி வகுத்ததுபோல்,கபீரும்,
குருநானக்கும்இது மேலும்
வலுப்பெற உழைத்தனர்.

அக்பரை ஒரு மகா காபிர் என்று
வர்ணித்த உலமாக்கள் அதிகம்.
அவர் அவர்களை பற்றி கவலை
கொள்ளவில்லை.தனது மனைவி
மகாராணி ஜோதாபாய், அவருக்கு
பிடித்த இந்து மதக் கடவுள்களை
வணங்க அநுமதி கொடுத்தார்.
இவர்களது மகன் தான் ஜஹாங்கீர்.
தோடர்மால்,மான்சிங் போன்ற
இந்து பெருமக்களே அக்பரின்
பிரதான அட்வைசர்கள் ஆவர்.
ஈஸ்ட் இந்தியா கம்பெனி
இந்தியாவில் காலூன்ற அநுமதி
வழங்கியதே மன்னர் ஜஹாங்கீர்
தான்.இந்தியாவின் வளத்தை
இந்த கம்பெனி அழிக்கிறது
என்பதை அறிந்த மன்னர்
அவுரங்கசீப் இந்த கிழக்கிந்திய
கம்பெனியின் லைசன்ஸை ரத்து
செய்தார். மகன் பகதூர் ஷா
மட்டும் கம்பெனிக்கு சற்று தலை
சாய்த்து இருந்தால் இந்தியாவின்
சரித்திரம் கூட சற்று மாறி
எழுதப்பட்டிருக்கும்.

இங்கிலாந்து மகாராணி
யின் அங்கீகாரத்தோடு
ஈஸ்ட் இந்தியா கம்பெனி
இந்தியாவில் நிரந்தரமாக
குடியேறவும்,ஆட்சியமைக்கவும்
இதுவே வழிவகுத்தன.
இங்கிலாந்தின் பிரித்தாளும்
சூழ்ச்சிக்கு இந்தியா பலியாகி
போனது கூட ஒரு சாபம் என்றே
சொல்ல வேண்டும்.

Vavar F Habibullah

No comments: