by ziyadaia
REVIEW ARTICLE OF ZAHRAVIஅல் ஜஹ்ராவி (A.D.936-1013)
THE FATHER OF MODERN SURGERY
நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://abedheen.blogspot.com/2013/07/albucasis.html )
Edited by :- Dr Ziyad A.I.A
அபுல் காஸிம் கலஃப் பின் அப்பாஸ் அல் ஜஹ்ராவி என்ற முழு பெயரையுடைய இவரை Abulcasis என்று லத்தின் மொழியில் மேற்கத்திய உலகத்தில் அறியப்படுகிறது. அந்துலுசியா என்றழைக்கப்படும் இன்றைய ஸ்பெயினில் அன்றைய இஸ்லாமிய தலைநகராக இருந்த கொர்தோபாவிலிருந்து வடமேற்கே 6 மைல் தூரத்து புறநகர் பகுதியான அல் ஜஹ்ரா என்ற இடத்தில் கிபி 936 க்கும் 940 க்கும் இடையே பிறந்தார். பிறந்தது, வளர்ந்தது, கல்வி, தொழில், என எல்லாமே கொர்தோபாவில்தான். தொழில் நிமித்தமாகவோ அல்லது கல்விக்காகவோ அல்லது வேறு காரணத்துக்காகவோ வேறு எங்கும் செல்லவில்லை.
தன் வாநாள் முழுவதும் மருத்துவத்திற்காக செலவிட்ட உத்தமர் மறைந்ததும் கொர்தோபாவில்தான்.
