Saturday, January 4, 2020

டாக்டர் ஜெய்ன் காதிரி



டாக்டர் ஜெய்ன் காதிரி
குமரி மாவட்டம் கோட்டாரை
சார்ந்தவர்.இடலாக்குடி அரசு
உயர் நிலை பள்ளியின் பழைய
மாணவர்.சாதாரண தமிழ்
மீடியத்தில் படித்தவர்.மதுரை
மருத்துவ கல்லூரியில் படித்து
டாக்டரான இவர்,கோட்டாறு
ஊரின், முதல் தமிழ் இளைஞர்.



இளமை காலத்தில்...
முதலில் சிங்கப்பூரில்,
மருத்துவ பணிபுரிந்த இவர்,
பின்னாளில் அமெரிக்காவில்
நிரந்தரமாக குடியேறி விட்டார்.
முகச்சீரமைப்பு சர்ஜரி
பிளாஸ்டிக் சர்ஜரி
இஎன்டி சர்ஜரி என
பல சிறப்பு துறைகளில்
முதுநிலை பட்டங்களை
வாங்கி குவித்த இவர்
இப்போது ஸ்டெம் செல்
சூப்பர் ஸ்பெசலிஸ்ட்
துறையில் நிபுணராக
தனித்துவம் பெற்று
விளங்குகிறார்.

பல அமெரிக்க மருத்துவ
பல்கலைக்கழகங்களில்
கவுரவப் பேராசிரியராக
பணியாற்றும் இவர்
அமெரிக்காவின் கலிபோர்னியா
மாகாணத்தின் லோஸ் ஏன்ஜலஸ்
நகரின்,புகழ்பெற்ற
பெவர்லி ஹில்சில், தனது
சொந்த மருத்துவமனையை
நீண்ட காலமாக நடத்தி வருகிறார்.
பிரபல ஹாலிவுட் நடிக,நடிகையர்
முக சீரமைப்பு காஸ்மெடிக் சர்ஜன்
இவர் தான்.மூக்கின் அழகு
தன்மையை மேம்படுத்தும்
அழகுக் கலை நிபுணர் இவர்.
உலக அழகிகள் இவரது
கன்சல்டிங் பெற பல மாதங்கள்
காத்து கிடக்கிறார்கள்.

சமீபத்தில் நான் அமெரிக்கா
சென்ற போது,என்னை சந்தித்து
பேச வேண்டும் என்பதற்காகவே
தனது பிஸி செட்யூலுக்கிடையில்
நேரம் ஓதுக்கி, கலிபோர்னியா
வில் இருந்து ஐந்து மணி நேரம்
டிராவல் செய்து, டெக்சாஸ்
வந்து என்னை சந்தித்து மிக
நீண்ட நேரம் உரையாடி மகிழ்ந்த
விதம் அவரது ஆழ்ந்த உள்ளார்ந்த
நட்பின் ஆத்மார்த்தம் என்றே
சொல்ல வேண்டும்.வாழும்
போதே மிக மிக அருகில்
இருந்தும் வாட்ஸ்அப்பில்
நலம் பேசும் நண்பர் மத்தியில்
இவரது உயர்ந்த ஆழ்ந்த
இயற்கை நட்பு என்னை
மிகவும் வியப்புற வைத்தது.
நட்பின் இலக்கணத்திற்கு
ஒரு எடுத்துக் காட்டு எனது
உயிர் நண்பர் ஜெய்ன் காதிரி
என்று சொன்னால் அது ஒரு
சுய விளம்பரம் அல்ல.

அலங்கார,ஆடம்பரமான
மிகவும் காஸ்ட்லியான
பேஷன் நகரான பெவர்லி
ஹில்சில் வாழும் என் நண்பர்
ஆடம்பரம் துறந்து ஒரு
சூஃபி துறவி போல்
மிகவும் சிம்பிளான
லைஃப் ஸ்டைலில்
வாழ்வது என்பது
அமெரிக்காவில்
எளிய விசயமல்ல.
அதற்காகவே அவரை
பாராட்ட வேண்டும்.

ஸ்டெம் செல் தெராபி
பற்றியும் குழந்தைகளின்
பிறவி ஆட்டிசம்
குறைபாடுகளை தடுக்க
ஸ்டெம் செல் தெராபி
எவ்வாறு பயன் தரும்
என்பதையும் தெளிவாக
மிகவும் சிம்பிளாக அவர்
என்னிடம் ஆங்கிலத்தில்
நிகழ்த்திய உரையாடலின்
ஒரு சிறு பகுதி எனது
நண்பர்கள் பார்வைக்காக....!



Vavar F Habibullah

No comments: