இந்துத்துவக் குறுமன வெறியர்களின் எதிர்ப்பை ஒட்டி நோய்டா Sector 58 ல் உள்ள பொதுப் பூங்காவில் இதுகாறும் நடந்து வந்த வெள்ளிக்கிழமைத் தொழுகைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நேற்று மூன்று தனியார் நிறுவனங்கள் தங்கள் அலுவலகத்தின் மேல்மாடியைத் தன் முஸ்லிம் ஊழியர்கள் தொழுகை நடத்தத் திறந்துவிட்டன.
அனுமதி மறுக்கப்பட்ட 58வது செக்டாரில் உள்ள தொழிலாளிகளில் பெரும்பாலோர் அங்குள்ள ஒரு கபர்ஸ்தான் அருகில் தங்களின் வெள்ளித் தொழுகைக் கடைமையை நிறைவேற்றினர்.
அனுமதி மறுக்கப்பட்ட 58வது செக்டாரில் உள்ள ஆயத்த ஆடை முதலாளி ஒருவர், தான் கடந்த 12 ஆண்டுகளாகத் தன்னிடம் வேலைசெய்யும் சுமார் 35 முதல் 40 முஸ்லிம் தொழிலாளிகளையும் தன் நிறுவனத்தின் மேல்மாடியில் தொழ அனுமதித்திருப்பதாக Hindustan Times பத்திரிக்கையாளரிடம் கூறியுள்ளார். எனினும் தன் பெயரை வெளியிட வேண்டாம் என அவர் கூறியுள்ளதை அறியும்போது மனம் நெகிழ்கிறது.
அல்லாஹ் அளவற்ற கருணை உள்ளவன் என முஸ்லிம்கள் நம்புகின்றனர்.
நாம் என்றென்றும் அவர்களோடு
Marx Anthonisamy
No comments:
Post a Comment