Monday, December 3, 2018

தினம் ஒரு செய்தி - 145 | பகுதி - 02

இந்த ஒரு நிமிட வீடியோவைப் பாருங்கள். நாம் தமிழர் கட்சி யூடியுபில் நாகூர் ரூமியின் தன்னம்பிக்கை வாசகங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அதுவும் உலகப் புகழ் பெற்ற மேலை நாட்டு அறிஞர்கள் வரிசையில்.

தனக்கான வெற்றிப்பாதையைத் தனக்குத்தானே உருவாக்கிக்கொள்ள எவன் பாடுபடுகிறானோ? அவன்தான் தன்னம்பிக்கை மனிதன் அவனே சிறந்த வெற்றியாளன்.
- நாகூர் ரூமி

ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்யும் தகுதி தன்னிடம் இருக்கிறதா? என்று ஒருவன் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அதைத் தன்னம்பிக்கையுள்ள வேறு ஒருவன் தைரியமாகச் செய்து விடுகிறான்!
- ஹென்றி சி லிங்க்.

நமக்கு வரும் சோதனைகளை ஒவ்வொன்றாகத் தன்னம்பிக்கையின் மூலம் கடந்து படிப்படியாக முன்னேறி அமையும் வெற்றியை விட மகிழ்ச்சியான செய்தி வாழ்க்கையில் வேறொன்றும் இல்லை!
- டாக்டர் சாம்வேல் ஜான்சன்
தனக்கான வெற்றிப்பாதையைத் தனக்குத்தானே உருவாக்கிக்கொள்ள எவன் பாடுபடுகிறானோ? அவன்தான் தன்னம்பிக்கை மனிதன் அவனே சிறந்த வெற்றியாளன்.
- நாகூர் ரூமி


ஒரு கதவு நம் வாழ்வில் சாத்தப்படும்போது எல்லோரும் வாழ்வே போய்விட்டதென்று தன்னம்பிக்கையின்றிப் புலம்புவது தவறு!
ஒரு கதவு மூடினால் ஒன்பது கதவுகள் திறந்தே கிடக்கும். மூடிய கதவை விரித்துக் கிடந்தே, திறந்த கதவுகளைக் கோட்டைவிட்டு விடக்கூடாது
- கெலன் கெல்லர்
https://youtu.be/xXg37ZAlJoI
---
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

No comments: