Tuesday, December 18, 2018

அபு ஹாசிமாவின் ரபியுல் அவ்வல் வசந்தம் நூல் வெளியீடு



"மனதிற்கு மகிழ்சியான நிறைவான நிகழ்வு"

வசந்தம்
நாகர்கோவில் நகரில்
ஞாயிறு மாலை நிகழ்ந்த
தம்பி அபு ஹாசிமாவின்
ரபியுல் அவ்வல் வசந்தம்
நூல் வெளியீட்டு விழாவில்
நூலை வெளியிட்டு உரை
நிகழ்த்திய போது
இன்று மாலையில் இறையருளால்
இனிதே நடைபெற்ற ஆசிரியர் Abu Haashima அவர்களின் "ரபிய்யுல் அவ்வல் வசந்தம்"
புத்தக வெளியீடு..Dr..Vavar F Habibullah


நீண்ட நாட்களாகவே மனதில் தோன்றிய கேள்வி ஒன்றை சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்டு உரையாற்றிய மரியாதைக்குரிய
அண்ணன் Meeran Mitheen அவர்கள் நமக்குள்
இன்னும் ஒருமுறை கேட்க்க வைத்து சிந்திக்க தூண்டியது பிரமிப்பாக இருந்தது.

நமக்குள் இருக்கும் இறை தேடலை கேள்வி கேட்க வைத்த அந்த வாசகம் "இறைவன் பார்த்துக்கொள்வான்" என்று வாய்
சொல்லில் சொல்லும் நாம் அதை எவ்வாறு கடைபிடிக்கிறோம் என்பதுதான்.
நான் உட்பட இன்னும் பலரின் போலித்தனமான பக்தியை கேள்விக்கு உட்படுத்தியது மிக அருமை...

ஒற்றுமையின்றி திணறும் சமுதாயம் பற்றிய ஆசிரியரின் ஆதங்கம் மிக நியாயமானது,
கூண்டில் அடைக்கப்பட்ட குரங்குகள்,இல்லாத வாழை பழங்களுக்காக அடித்துகொண்டு
மடிந்த கதையின் நியாபகம்தான்
உதாரணமாக மனதில் வந்து சென்றது.

சில நண்பர்களை கண்டு மகிழ்ந்த சந்தோஷம்,உறவினர்கள் வீட்டிற்கு வந்திருந்ததால் அதிக நேரம் செலவு செய்ய
முடியாமல் விரைந்து வந்துவிட்டாலும்,
இன்று மாலையில் கடந்து சென்றது என்று நினைத்தாலும் அசைபோடதக்க சுவையான
நிகழ்வுகளில் ஒன்று.

அபு ஹாஷிமா அவர்களுக்கு இறைவன் உடல் ஆரோக்கியத்தையும்,அமைதியான நல்ல
வாழ்கையையும் வழங்கி ஈருலகிலும் அவன்
பேரருளை வாரி வழங்குவானாக...ஆமீன்

(புகைப்படத்தில் இருப்பது படித்ததும் என் மனம் கவர்ந்த ஒரு கவிதை...)

Bhuvan
Abu Haashima அண்ணனின்
"ரபிய்யுல் அவ்வல் வசந்தம்"
நூல் வெளியீடு

வாழ்த்துக்கள்

No comments: