வாழ்க்கைதான் எத்தனை சுவாரஸ்யமானது ...
ஊரிலிருந்து வந்த அலுப்பின் காரணமாக நேற்று வெளியே எங்கும் போகவில்லை.
இரவு நேரத்தில் சும்மா வெளியே கொஞ்ச நேரம் நடந்து வரலாம் என்று கிளம்பினேன்.
என் பேத்திகள் நாங்களும் கூடவே வருவோம் என்று அடம் பிடிக்க அழைத்துச் சென்றேன்.
பக்கத்திலேயே ஓரு பெரிய சூப்பர் மார்க்கெட்.
ஏதாவது வாங்கலாம் என்று உள்ளே
நுழைந்தேன்.
நமக்குத் தேவையான தேவையில்லாத
எல்லாப் பொருட்களும் அங்கே இருந்தன.
காய்கனிகள் ஏகமாய் குவிந்து கிடக்க
கொஞ்சம் ஆரஞ்சு பழங்களை எடுத்தேன்.
உடனே என் பேத்தி ஹஸ்னா ஓடிச்சென்று ஒரு கீஸை ( பிளாஸ்டிக் கவர் ) எடுத்து வந்து அதில் அந்த ஆரஞ்சுகளை போட்டு அங்கே கொஞ்சம் தள்ளி இருந்த கவுன்டரில் கொடுத்து
எடையும் விலையும் போட்டு வாங்கி வந்தது.
இளைய பேத்தி ஆமினாம்மாவும்
அதன் பங்குக்கு இரண்டு கவர்களில்
காய் கனிகளை போட்டு வாங்கி வந்தது.
கவுன்டரில் பணத்தை கொடுத்து விட்டு
வெளியே வந்தால் நாம தங்கி இருக்கிற பில்டிங் எந்த பக்கம் இருக்குன்னு தெரியலே.
குழந்தைங்க நம்ம நம்ம கையை பிடித்து
" அப்பா ... இப்படி வாங்க " என்று அழைத்துச் சென்று லிப்டை ஓப்பன் செய்து சரியான மாடியின் பட்டனை தட்டி
பத்திரமாக ரூமில் கொண்டு வந்து சேர்த்தார்கள்.
மனசெல்லாம் மீண்டுமொரு வசந்தம்
பூத்தது.
காலம்தான் எத்தனை வேகமாக
மாறிக் கொண்டிருக்கிறது.
பிள்ளைகள் நம் கை பிடித்து நடந்த காலம் மாறி ...
நாம் பிள்ளைகளின் கைபிடித்து நடக்கும் காலம் !
இறைவனின் கருணையை நினைத்து
நன்றி சொல்லி மகிழ்ந்து கிடக்கின்றேன்.
Abu Haashima
துபாய்க்கு வந்து
முதல் ஜும்மாத் தொழுகை ...
சார்ஜாவிலுள்ள
காலித் பின் வலீத் பள்ளி வாசலில்
பல்லாயிரக்கணக்கான மக்களோடும்
மகனோடும் நிறைவேறியது !
காலித் பின் வலீத்
மிகப்பெரிய வீரர்.
உஹது யுத்தத்தின் போக்கையே இவரது விவேகமான முடிவு மாற்றியது வரலாறு.
குறைஷிகளின் வெற்றித் தளபதியாக இருந்த இவர் நபி பெருமானாரின்
மகத்தான மக்கா வெற்றிக்குப் பின்னால்
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
இவரை
#அல்லாஹ்வின்_வாள் என்று
ரஸூலுல்லாஹ் அழைத்தார்கள் .
அவர் பெயரால் அழைக்கப்படும்
பள்ளியில் இன்று தொழுதது
புத்துணர்ச்சியைத் தருகிறது.
Abu Haashima
No comments:
Post a Comment