Tuesday, December 18, 2018

சூபிஞானி ஜலாலுத்தீன் ரூமி நினைவு தினம்

டிசம்பர் 17.சூபிஞானி ஜலாலுத்தீன் ரூமி நினைவு தினம்.அல் பாத்திஹா.

1207 ஆம் ஆண்டு முதல் 1273 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த ரூமி என்கின்ற மௌலானா ஜலாலுதீன் ரூமி பதிமூன்றாம் நூற்றாண்டு பாரசீக கவிஞர் ஆவார். மிகவும் பிரபலமான கவிஞர் மட்டுமின்றி விற்பனையிலும் சிறந்து விளங்கிய படைப்புகளைக் கொடுத்தவர். இவரது படைப்புகள் பெரும்பாலும் பாரசீக மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. இருப்பினும் சில சமயங்களில் இவர் துருக்கி, அரபு மற்றும் கிரேக்க மொழிகளையும் பயன்படுத்தியுள்ளார். இவருடைய கவிதைகள் உலகின் பல மொழிகளிலும் பரவலாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டும், பல்வேறு வடிவங்களில் மாற்றம் பெற்றும் சிறப்படைந்துள்ளன. துருக்கி, அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் இவரது படைப்புகள் மிகவும் பிரபலம்.


# அழகு நம்மைச்சுற்றியே உள்ளது, ஆனால் நாம் வழக்கமாக ஒரு பூங்காவில் நடந்தே அழகைத் தெரிந்துகொள்கிறோம்.

# துயரப்பட வேண்டாம். நீங்கள் இழக்கும் எதுவாயினும் மற்றொரு வடிவத்தில் உங்களிடமே திரும்பவும் வரும்.

# ஒவ்வொருவரும் குறிப்பிட்ட வேலைக்காகவே படைக்கப்பட்டுள்ளனர், அந்த வேலைக்கான ஆசை ஒவ்வொரு இதயத்திலும் வைக்கப்பட்டுள்ளது.

# நாம் அனைவரும் அன்பாலேயே பிறந்துள்ளோம்; அன்பு நமது தாய்.

# நமக்குள் கண்ணுக்குத் தெரியாத வலிமை ஒன்று உள்ளது.

# மிகவும் சிறியதாக செயல்படுவதை நிறுத்திவிடுங்கள்.

# நீங்கள் இறகுகளுடனே பிறந்துள்ளீர்கள், ஏன் வாழ்க்கையில் தவழ்ந்து செல்ல விரும்புகிறீர்கள்?

# உங்கள் வார்த்தைகளை உயர்த்துங்கள், குரலை அல்ல.

# உங்களை அச்சப்படுத்துபவர்களையும் துன்பப்படுத்துபவர்களையும் புறக்கணியுங்கள்.

# பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் உங்களுக்குள்ளே உள்ளது. அனைத்தையும் உங்களிடமே கேளுங்கள்.

# துன்பம் என்பது ஒரு பரிசு. அதில் மறைக்கப்பட்ட கருணை உள்ளது.

# நீங்கள் எங்கிருந்தாலும், நீங்கள் எதைச்செய்தாலும் அன்புடன் இருங்கள்.

# அன்பின் வெளிப்பாட்டில் காரணம் என்பது சக்தியற்றது.

# வலிக்கான சிகிச்சை வலியிலேயே உள்ளது.

# நினைவில் கொள்ளுங்கள்: நீங்கள் அன்பு செலுத்தும் வழியே கடவுள் உங்களுடன் இருக்கப்போகும் வழி.

# தாகம் மட்டும் தண்ணீரைத் தேடுவதில்லை, தண்ணீரும் தாகத்தை தேடுகிறது.

Mujeeb Rahman

No comments: